சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக்
நடிகை வனிதா விஜயக்குமார் தனது கேரியரின் இரண்டாவது இன்னிங்சை அருமையாக ஆடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல மெச்யூர்டாக மாறியுள்ள வனிதா சினிமா, தொழில் என பிசியாக வலம் வருகிறார். இதுநாள் வரையில் அவ்வப்போது சீரியலில் கெஸ்ட் ரோலுக்கு மட்டும் தலைக்காட்டி வந்த வனிதா தற்போது புது சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் "மாரி" என்கிற புதிய தொடரில் "சகுந்தலா" என்ற கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். அவரது என்ட்ரியே செம மாஸாக உள்ளது. சீரியல்களில் மற்ற நடிகைகள் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து பேமஸ் ஆகி வருகின்றனர். வனிதாவிற்கு வில்லத்தனம் செய்வதெல்லாம் சாதரணமான விஷயம். எனவே, மாரி தொடரில் அவரது கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் ரீச்சாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.