மீண்டும் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் வந்தனா
சின்னத்திரை வில்லி நடிகையான வந்தனா மைக்கேல் தற்போது மீண்டும் வில்லியாக ரீ- என்ட்ரி கொடுக்கிறார். ஆனந்தம் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாக வந்தனா தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். "வம்சம்" தொடரில் முதன்முறையாக வில்லியாக நடித்த போது அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து "கல்யாணம் முதல் காதல் வரை", "மெல்ல திறந்தது கதவு", "பொன்மகள் வந்தாள்" ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து அதிகம் பிரபலமானார். இடையில் சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த வந்தனா தற்போது மகராசி சீரியலில் மீண்டும் வில்லியாக நடிக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வரும் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாக வந்தனா நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. வந்தனாவின் ரீ-என்ட்ரியை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.