கையில் சிகரெட்டுடன் வித்யா பிரதீப் : வைரலான போஸ்டர்
சின்னத்திரை நடிகையான வித்யா பிரதீப் கையில் சிகரெட்டை பிடித்து கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று திடீரென வைரலானது. இதைபார்த்து முதலில் ரசிகர்கள் பலரும் அதிர்ந்தனர். ஆனால், அது அவர் நடித்து வரும் "திரும்பிப்பார்" படத்தின் போஸ்டர்லுக் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. வித்யா பிரதீப் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலக்கட்டங்களில் வித்யா பிரதீப் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சின்னத்திரையில் அவர் நடித்த "நாயகி" தொடர் தான் அவருக்கு பெரிய புகழை பெற்றுத்தந்தது. இதன் மூலம் வித்யா பிரதீப்புக்கு மீண்டும் வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், 2021ம் ஆண்டில் மட்டும் அவர் நடிப்பில் 6 படங்கள் வெளியாகிவுள்ளது. தவிர 9 புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.