சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

ஸ்ரேயா ரெட்டி நடிப்பதை இடையூறு செய்வது யார்? - சொல்வாரா வசந்தபாலன்

ஸ்ரேயா ரெட்டி நடிப்பதை இடையூறு செய்வது யார்? - சொல்வாரா வசந்தபாலன்
Advertisement
எழுத்து அளவு

விஷால் நடித்த "திமிரு" படத்தில் வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அந்தப் படம்தான் அவரைப் பிரபலப்படுத்தியது. பின்னாளில் நிஜ வாழ்க்கையில் அவரே விஷாலுக்கு அண்ணியாகவும் வந்தார். ஸ்ரேயா ரெட்டி பின்னர் “வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், சலார்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

"சுழல்" வெப் சீரிஸில் நடித்தவர் அடுத்து "தலைமைச் செயலகம்" வெப் சீரிஸில் கொற்றவை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்புப் பற்றி பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் வெப் சீரிஸின் இயக்குனர் வசந்தபாலன் அவரது முகப்புத்தகத்தில், “கொற்றவை ( sriya reddy ) Very powerful presence. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் "நல்லா வருதுல்ல! எப்படி வருது ? நீங்க happy-ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு, அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் happy-ஆ? " என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத்தொடரின் தரம், வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.

என் மேல் கொண்ட நம்பிக்கையிலே மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள். அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும் I will do only for vasanthabalan என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள். தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான்,” எனப் பதிவிட்டுள்ளார்.

ஸ்ரேயா ரெட்டியை இத்தொடரில் நடிக்க விடாமல் இடையூறு செய்த அந்த ஆயிரம் சக்திகள் யார் என்பதை இயக்குனர் வசந்தபாலன் சொல்வாரா ?.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,

மேலும் படிக்க

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map