மாரி சீரியலை விட்டு நடிகை சோனா விலக காரணம் என்ன?
சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் தாரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக கலக்கி வந்தார். அவரது மிரட்டலான நடிப்பு நேயர்களிடமும் பாராட்டுகளை பெற்ற வந்தது. ஆனால், சோனா திடீரென மாரி சீரியலை விட்டு விலகிவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாததால் ரசிகர்கள் குழம்பினர். இந்நிலையில், தற்போது சக நடிகையுடன் ஏற்பட்ட பிரச்னை தான் காரணம் என தெரியவந்துள்ளது.
மாரி தொடரில் சோனாவுக்கு மருமகளாக நடிக்கும் ஷப்னம் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் எல்லோரையும் ஜாலியாக கிண்டலடித்து பேசுவார். அவர் ஒரு முறை சூட்டிங்கின் போது சோனாவை பற்றி கிண்டலாக பேச இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் கோபமான சோனா ஒருகட்டத்தில், "மாரி சீரியல்ல அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்" என்ற ரேஞ்சில் சீரியல் குழுவினரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். சோனாவை சமாதானப்படுத்த முடியாத சீரியல் குழுவினர் தாரா கதாபாத்திரத்திற்கு வேறு நடிகையை தேட ஆரம்பித்துவிட்டதாக சின்னத்திரை வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.