குக் வித் கோமாளியில் ரீ-என்ட்ரி கொடுப்பாரா ஜி.பி.முத்து?
குக் வித் கோமாளியின் நான்காவது சீசனுக்கும் முந்தைய சீசனை போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீசனில், மக்களை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திய விஷயமே ஜி.பி.முத்துவின் என்ட்ரி தான். தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், குக் வித் கோமாளியில் என்ட்ரியானது பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி.பி.முத்து, கடந்த சில எபிசோடுகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த வார புரோமோவிலும் ஜி.பி.முத்து இடம்பெறவில்லை. எனவே, அவர் விலகிவிட்டாரா என மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள ஜி.பி.முத்து, "ரெஸ்ட் இல்லாமல் அலைந்து கொண்டிருப்பதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதிக்கு மேல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும். இப்போது மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதன்காரணமாக குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து ரீ-என்ட்ரி கொடுப்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகிவிட்டது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.