10th ரிசல்ட் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி | Result | 10TH | public exam
தமிழகத்தில் 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியானது.
பள்ளி கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
ஒட்டு மொத்தமாக 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
94.31 சதவீதமாக தேர்ச்சி சதவீதம் உள்ளது.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 92.15 சதவீதமும், மாணவிகள் 96.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடமும்,
97.54 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாவது இடமும் பிடித்துள்ளன.
அதற்கு அடுத்தபடியாக 97.41 சதவீதத்துடன் தஞ்சாவூர் , 97.31 சதவீதத்துடன் திருச்சி , 97.30 சதவீதத்துடன் கன்னியாகுமரி உள்ளது.
1,931 அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 91.86% ஆக உள்ளது.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5171 ஆக உள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.