சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மிஸ்டர் எக்ஸ் - விமர்சனம்

தயாரிப்பு - ஆர்யா | இயக்கம் - மனு ஆனந்த்

Published

on

மிஸ்டர் எக்ஸ்

மிஸ்டர் எக்ஸ்

2 மணிநேரம் 33 நிமிடம்
★★★★★
★★★★★
2.25
  • ஆர்யா
  • மஞ்சு வாரியர்
  • ஏப் 17, 2026
  • மனு ஆனந்த்
  • மிஸ்டர் எக்ஸ் - ஆங்கில படங்களை பார்த்து சூடு போட்டுக்கொண்ட தமிழ் எக்ஸ்
தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் : மனு ஆனந்த்
நடிப்பு : ஆர்யா, சரத்குமார், கவுதம்ராம் கார்த்தித், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன், அனகா
ஒளிப்பதிவு : அருள் வின்சென்ட்
இசை : திபு நினன் தாமஸ்
வெளியான தேதி : ஏப்ரல். 17, 2026
நேரம் : 2 மணிநேரம் 33 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் தலைமையில் 20 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு மாநாடு நடக்கும் நிலையில், அணு ஆயுதம் மூலம் ஒரு பேரழிவை ஏற்படுத்த நினைக்கிறது வில்லன் கவுதம்ராம் கார்த்திக் அண்ட் டீம். இந்திய உளவு அமைப்பான ரா பிரிவை சேர்ந்த உயர் அதிகாரி மஞ்சு வாரியர், உளவாளியாக இருக்கும் ஆர்யா உள்ளிட்ட குழு அதை தடுத்ததா? இந்த செயலை திட்டமிடும் மிஸ்டர் எக்ஸ் யார்? இதுதான் மனு ஆனந்த் இயக்கிய மிஸ்டர் எக்ஸ் படத்தின் கதை

தேசபக்தியுள்ள உளவாளிகள் கதை, ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதத்தை கைப்பற்ற நினைக்கும் வில்லன் கதை, ஹீரோ கும்பல் மோதல் கதை, அப்பா, மகன், அண்ணன், தங்கை பாசக்கதை, காதல் கதை, துரோக கதை, பல ஹாலிவுட் கதை, சில உண்மை கதை என பல கதைகளை மொத்தமாக கலக்கி மிஸ்டர் எக்ஸ் ஆக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

டாக்டரான அனகாவை காதலிக்கிற வேலையை பார்க்கும் ஆர்யாவிடம் உடனே ரஷ்யாவுக்கு போ. அங்கே உங்க டீமுக்கு வேலை இருக்கிறது. அணு ஆயுத மூலப்பொருளுடன், நம்ம ஆள் சரத்குமார் எதிரிகளிடம் மாட்டிகிட்டு இருக்காரு. அவரையும் மீட்டு, அந்த பொருளையும் மீட்டுகிட்டு வா என டில்லியில் இருந்து நேரில் வந்து கட்டளையிடுகிறார் ரா அதிகாரி மஞ்சு வாரியர். அதிலிருந்து கதை வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. அதற்கு முந்தைய சீன்கள் சுமார்.

கட்டுமஸ்தான உடலுடன் அறிமுகம் ஆகிறார் ஆர்யா. வேண்டா வெறுப்பாக உளவுத்துறையில் வேலை செய்வதால் அவர் பேச்சு, பாடிலாங்குவேஜ் டல் ஆக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் உணர்ச்சி அதிகம் இல்லாமல் அவர் பேசுவதும் படத்துக்கு மைனஸ். அவருக்கு அனகாவுக்குமான காதல் காட்சிகள் ஓகே ரகம். அதேசமயம் கிளைமாக்ஸ் பைட் உட்பட பல ஆக் ஷன் காட்சிகளில், வில்லன் கவுதம்ராமை தேடி அவர் ஓடும் இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். உளவாளி கதை என்பதால் ஆர்யாவுக்கு ஆடல், பாடல், குத்தாட்டம், காமெடி இதுபோன்ற சீன்கள் இல்லை.

வில்லனாக வரும் கவுதம்ராம் கார்த்திக் கேரக்டர் ஆறுதல். அவருக்கு பல இடங்களில் வில்லத்தனம் செட்டாகி இருக்கிறது. அவரை வயதானவர் போல காண்பிக்கிற கெட் அப் மைனஸ். இடைவேளைக்குபின் ஆர்யாவை விட பல இடங்களில் மிரட்டியிருக்கிறார் கவுதம். கிளைமாக்ஸ் சண்டைகாட்சியிலும் கலக்கியிருக்கிறார். என்னடா மஞ்சுவாரியருக்கு இப்படிப்பட்ட கேரக்டரா? நடிக்க ஒன்றுமே இல்லை. அவர் நடிப்பும் சரியில்லை, செயற்கைதனமாக இருக்கிறதே என்று நினைக்கும்போது கிளைமாக்சில் அவரும் ஆக் ஷன் அவதாரம் எடுத்து கைதட்டல் வாங்குகிறார்.

ஆரம்பத்தில் ரொம்பவே அப்பாவியாக வரும் அதுல்யா ரவி கேரக்டர், கடைசியில் வேறு மாதிரி மாறுகிறது. ரைசாவுக்கும் நல்லதொரு கேரக்டர். ஆர்யா காதலி அனகா நடிப்பும் ஓகே. ஆனால், இந்த கேரக்டர்களை இன்னும் டெவலப் செய்து சீன் வைத்து இருக்கலாம். எதிலும் நிறைவு இல்லை. இவர்களை தவிர சஞ்சனா சிங் சில சீன்களில் வந்துபோகிறார். பொருத்தம் இல்லாத வேடம், மிகைப்படுத்தல் நடிப்பு என காளிவெங்கட் கூட ஏமாற்றி இருக்கிறார். உளவு உயர் அதிகாரியாக வரும் ஜெயபிரகாஷ் நடிப்பும் அவர் செயற்கைதனம்.

வயதான கெட்அப்பில் சரத்குமாரும் முக்கியமான கேரக்டராக வருகிறார். அவரை சுற்றி ஏகப்பட்ட டுவிஸ்ட், கிளைமாக்சிலும் இன்னும் டுவிஸ்ட். ஆனால், அவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் சீன், சென்டிமென்ட் சீன் பல படங்களில் பார்த்து சலித்தது. பிரதமராக வருகிற நபர், ஓரளவு அப்படியே இருக்கிறார். அப்புறம், ஏகப்பட்ட வில்லன்கள், போலீசார், பாதுகாப்படையினர். சண்டை போடுகிறார்கள், சாகிறார்கள். யாரும் கேட்கவில்லை, எந்த விசாரணையும் இல்லை.

விறுவிறுவென கொண்டு செல்ல வேண்டிய படத்தை குழப்பி, ஏகப்பட்ட கேரக்டர்களை திணித்து, அதற்கு ஒரு கதை சொல்லி படத்தை இழுத்து இருக்கிறார் இயக்குனர். காதல், சென்டிமென்ட் காட்சிகள் மட்டுமல்ல, உளவுத்துறை சம்பந்தப்பட்ட பல காட்சிகளே கதையுடன் செட்டாகவில்லை. ரா, ராணுவம் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மிகப்பெரிய பேரழிவு விஷயத்தை இப்படி நாலைந்து பேர் தான் கையாளுவார்களா? மற்ற அதிகாரிகள், ராணுவம், போலீஸ், பாதுகாப்பு துறையினர் எங்கே என்ற கேள்வி படத்தை இன்னும் மைனஸ் ஆக்குகிறது. படத்துல ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்.

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தவிர மற்ற இடங்களில் ஆக் ஷனும் மிஸ்சிங். இந்த மாதிரி கதைக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்?. இதில் ஏனோ தானாவென இருக்கிறது. பாடல்களிலும் பிரயோஜனம் இல்லை. அருள் கேமிரா வொர்க்கை பாராட்டலாம். இனி, உளவாளி படங்களை உளவுத்துறையினர் பார்த்து தடையில்லா சான்றிதழ் தரணும் என சென்சார் சொன்னால் நல்லா இருக்கும்.

மிஸ்டர் எக்ஸ் - ஆங்கில படங்களை பார்த்து சூடு போட்டுக்கொண்ட தமிழ் எக்ஸ்

கருத்து பதிவு செய்ய

கருத்துகளை எழுதுங்கள்...

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Published on 2026
மிஸ்டர் எக்ஸ்

மிஸ்டர் எக்ஸ்

Published on 2022
எப்ஐஆர்

எப்ஐஆர்

மேலும் விமர்சனங்கள்

29

29

தயாரிப்பு : ஸ்டோன்பெஞ்ச் ஸ்டூடியோ, ஜி ஸ்குவார்டுஇயக்கம் : ரத்னகுமார்நடிப்பு : விது, ப்ரீத்திஅஸ்ராணி, மாஸ்டர்

பேட்ரியாட் (மலையாளம்)

பேட்ரியாட் (மலையாளம்)

தயாரிப்பு : ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனிஇயக்கம் : மகேஷ் நாராயணன்நடிப்பு : மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பஹத்

கர

கர

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்இயக்கம் : விக்னேஷ்ராஜாநடிப்பு : தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார்,

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map