சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் மீது தாக்குதல்  Kerala | Pinarayi_Vijayan | Marxist_communist

சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் Kerala | Pinarayi_Vijayan | Marxist_communist

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 27, 2026
சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் Kerala | Pinarayi_Vijayan | Marxist_communist | Kerala_ExCM | ED | ED raid கேரளாவில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர் சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது பினராயி விஜயனுக்கு சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். கோழிக்கோட்டில் உள்ள முன்னாள் அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயன் வீட்டில் சோதனையை முடித்து வெளியே வந்த அமலாக்கத்துறையினர் காரில் ஏறி புறப்பட்டனர் அப்போது அங்கு கூடியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் பினராயி விஜயன் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையினர் காரை மறித்தனர் அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். போலீசாரின் பாதுகாப்பையும் மீறி கார்கள் மீது கற்களை வீசி அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. காருக்குள் பெண் அதிகாரிகள் உட்பட பலர் இருந்த நிலையில் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் சேதமடைந்தது. தம்பானூர் போலீசில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map