சோகத்தில் சண்முகம் அணி; மகிழ்ச்சியில் இபிஎஸ் | Vijay | EPS | ADMK vs TVK | EPS vs CVS | TN Cabinet

சோகத்தில் சண்முகம் அணி; மகிழ்ச்சியில் இபிஎஸ் | Vijay | EPS | ADMK vs TVK | EPS vs CVS | TN Cabinet

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 22, 2026
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி ஆகியோர் தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால், பொதுச்செயலர் பழனிசாமி தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது. சட்டசபை தேர்தலில், 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது. தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெகவுக்கு ஆட்சியமைக்க, பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது; காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. அதிமுகவில் பொதுச்செயலர் பழனிசாமியை எதிர்த்து, சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து, தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map