திருவள்ளூரில் வெடிகுண்டு செயலிழப்பு: பகீர் காட்சிகள் | Fisherman Nets Sea Bomb Tamil Nadu
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் தேவபிரகாஷ்.
கடந்த 18ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றார்.
அப்போது அவரது வலையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட துருப்பிடித்த இரும்பு குண்டு சிக்கியது.
பார்க்க பழைய வெடிகுண்டு போல தெரிந்தது.
இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது.
சோதனையில் அது வெடிக்காத குண்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
உலகப்போர் காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.