அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி pmk| Ramadoss| Anbumani| mango symbol| pmk symb

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி pmk| Ramadoss| Anbumani| mango symbol| pmk symb

Dinamalar Cinema Logo dinamalarcinema மார் 26, 2026
பாமக தலைவர் யார் என ராமதாஸ், அவர் மகன் அன்புமணி இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாமக இரண்டாக உடைந்த நிலையில், அன்புமணிக்குதான் கட்சியும், மாம்பழம் சின்னமும் சொந்தம் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தரப்பு உரிமையியல் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டது. மேலும், அந்த மனுவை விசாரித்து 3 நாட்களுக்குள் இறுதி முடிவை உரிமையியல் கோர்ட் எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது. pmk| Ramadoss| Anbumani| mango symbol| pmk symbol Case| ramadoss Case dismissed
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map