போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய முறை கடைபிடிப்பு! Vijay | CM Convoy | Traffic Jam | TVK | Jayala

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய முறை கடைபிடிப்பு! Vijay | CM Convoy | Traffic Jam | TVK | Jayala

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 17, 2026
தமிழக முதல்வர் விஜய், தினசரி சென்னையில் உள்ள தன் நீலாங்கரை வீட்டில் இருந்து, 17 கி.மீ. துாரத்தில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்கிறார். அவரது பாதுகாப்பு பணியில் நுாற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், தினசரி கிழக்கு கடற்கரை சாலை மட்டுமின்றி, பல பிரதான சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போலீசார் சிரமப்பட்டனர். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியை பின்பற்றி, டியூன் லைன் முறையை போலீசார் அமல்படுத்தி உள்ளனர். இதன்படி, நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் வரையிலான சாலையில் ஒரு பகுதியில் மட்டும், பிளாஸ்டிக் கூம்புகள் அமைத்து, முதல்வரின் கான்வாய்க்காக தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வரின் கார், பாதுகாப்பு வாகனங்கள் சீறிப்பாய்ந்தாலும், மறுபக்கம் மற்ற வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படுவதில்லை. சிக்னல்களில் பொதுமக்கள் தேவையின்றி காக்க வைக்கப்படுவதில்லை. முதல்வர் அந்த பகுதியை கடந்த பின், அந்த கூம்புகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் வழக்கமான போக்குவரத்தை போலீசார் அனுமதிக்கின்றனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது உத்தரவுப்படி மெரினா காமராஜர் சாலையில், இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. #Vijay #CMConvoy #TrafficJam #TVK #Jayalalitha #ExCM #TamilNaduPolitics #PoliticalDebate #RoadsBlocked #VehicleParade #LeaderImpact #PublicResentment #AuthorityVisit #CivicIssues #UrbanTraffic #SeriousTraffic #PoliticalLeadership #StateGovernance #VoterAwareness #DriveCarefully
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map