முதல்வராக பொறுப்பேற்றபின் டில்லியில் பிரதமர் மோடியை விஜய் இன்று முதல் முறையாக சந்தித்தார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் வரை நீடித்தது. சந்திப்பின் போது பிரதமர், சோழர்கால ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு வந்தமைக்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து 4 முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் வைத்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பாட உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் வான்வழி அமைப்பு மையத்தினை தமிழகத்தில் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட பூமி பூஜையை நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது இது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கும் முரணானது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் அறிவுறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களை விடுவிக்க வேண்டும் தமிழக மீனவர்களின் 266 படகுகளை மீட்டு வர இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் விஜய் கூறி உள்ளார்.