சம்பளத்தை உயர்த்திய சஞ்சய் தத்

சம்பளத்தை உயர்த்திய சஞ்சய் தத்
Advertisement
எழுத்து அளவு

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒரு காலக்கட்டத்தில் பாலிவுட்டில் பல சர்ச்சைகளை கடந்து 100 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். அதன்பிறகு ஹிந்தி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சஞ்சய் தத்.

தமிழில் "லியோ" படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் " டபுள் ஐ ஸ்மார்ட் சங்கர்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சஞ்சய் தத் வாங்கிய சம்பள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் பெற்று வந்தார் சஞ்சய் தத். தற்போது இந்த படத்தில் 60 நாட்கள் நடிப்பதற்காக தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map