ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்?

ரிலீஸூக்கு தயாராகும் சர்வர் சுந்தரம்?
Advertisement
எழுத்து அளவு

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் ரிலீஸூக்கு தயாரான படம் "சர்வர் சுந்தரம்". அந்தசமயம் இந்த படத்தின் மீது பல கடன்கள் இருந்ததால் ரிலீஸ் ஆகவில்லை. கடனை தீர்க்க 9 வருடங்களாக இதன் தயாரிப்பாளர் போராடி வருகிறார்.

சமீபத்தில் இந்த பொங்கல் வெளியீட்டில் இருந்து ஜனநாயகன் விலகியதால் சர்வர் சுந்தரம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ஜனவரி 14ம் தேதியன்று திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சர்வர் சுந்தரம் விரைவில் திரைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது. ஏனெனில், சந்தானம் தற்போது ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் "லவ் பைட்" எனும் படத்தில் நடித்து வருகிறார். சந்தானம், ஏஜிஎஸ் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சர்வம் சுந்தரம் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் விநியோகம் பொறுப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map