சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

எந்த கேரக்டருக்கும் செட் ஆவேன்! நடிகை சவுந்தர்யா

எந்த கேரக்டருக்கும் செட் ஆவேன்! நடிகை சவுந்தர்யா
Advertisement
எழுத்து அளவு
பார்த்ததும் "ஹாய்" சொல்ல தோன்றும் வசீகர முகம். பேசி பேசி சிரிக்க வைக்கும் கலகல பேச்சு. எந்த கேரக்டருக்கும் பொருந்தக்கூடிய தோற்றம் என நாடகம், குறும்படம், சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வலம் வருபவர் சவுந்தர்யா. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்.""நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னைதான். சின்ன வயசில் இருந்தே நடிப்பு மேலே ஒரு ஈர்ப்பு இருந்தது. நான், அப்பா மகேஷ்பாபு எல்லாம் அப்பவே குடும்பத்தினர், சொந்தக்காரங்ககிட்ட நடித்து காட்டுவோம். அதைதான் இப்போ "ரீல்ஸ்"னு சொல்றாங்க. கல்லுாரி படிக்கும்போது கலை விழாவில் என் நடிப்பை பார்த்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த "பாம்பே" ஞானம், "நீ நல்லா நடிக்கிறீயே. நாடகத்தில் ஏன் நடிக்கக்கூடாது" எனக்கேட்டார். எனக்கு அது உத்வேகத்தை தந்தது. அவரது குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இந்த குழுவுக்கு என்ன சிறப்புனா, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிப்பார்கள். நானே 3 கேரக்டர் வரை நடித்தேன்.இதற்கிடையே காதல் திருமணம் நடந்தது. கணவர் சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ.,வாக உள்ளார். என் ரசிகராக இருந்து நாடகங்களை பார்த்து திருமணம் செய்து கொண்டவர். இரு மகன்கள் உள்ளனர்.கணவர் வேலை விஷயமாக சில ஆண்டுகள் புனேவிற்கு செல்ல நேரிட்டது. குடும்பத்திற்காக அங்கு நேரத்தை செலவிட்டேன். ஒரு கட்டத்தில் மீண்டும் நடிப்பின் மீது ஆசை துளிர்விட்டது. 2017ல் மேயாத மான் படத்திற்கான ஆடிஷன் நடந்தது. நடித்து காட்டினேன். செலக்ட் செய்தார்கள். அடுத்தடுத்த வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த நேரத்தில் கொரோனா வந்தது. சினிமா தொழிலே முடங்கி இருந்ததால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சமூகவலைதளங்கள் மூலம் மக்களிடம் நல்லா "ரீச்" ஆகி எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. கோமாளி, ஜெயில், வெந்து தணிந்தது காடு, மாவீரன், லவ் டுடே, வேட்டையன் வரை நடித்து விட்டேன். ஒரே மாதிரியான கேரக்டர் வந்தால் தவிர்த்து விடுகிறேன். சின்ன சின்ன கேரக்டர் என்றாலும், கதைக்கு ஏற்ற கேரக்டரா என பார்த்து "ஒ.கே." சொல்லி வருகிறேன். இப்போ சில படங்கள் ஷூட்டிங் போயிட்டு இருக்கு.சில கேரக்டர் எல்லாம் வேண்டாம் என நான் தயங்கிபோது, கணவர் சரவணன் "நல்ல கதை போல் தெரிகிறது" என்பார். அப்படி நான் யோசித்து பிறகு "கமிட்" ஆன படம்தான் ராயன். அந்த படம் எனக்கு நல்ல பேரை வாங்கிக்கொடுத்தது. அம்மா, அக்கா, அத்தை, மனைவி என எந்த கேரக்டர் என்றாலும் எனக்கு "செட்" ஆகிடும்.நான் ஒரு யோகா மாஸ்டரும் கூட. 10 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன். சினிமாவில் "பிஸி"யாக இருப்பதால் மாஸ்டராக இருந்து மற்றவர்களுக்கு சொல்லித்தர முடியவில்லை. அதேசமயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் யோகா செய்ய தவறுவதில்லை. என் இளமைக்கு அது ஒரு காரணம். யோகாவில் இப்போ பிஎச்.டி., பண்ணிட்டு இருக்கிறேன். தவிர ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறேன்"" என ஆச்சரியப்பட வைக்கிறார் சவுந்தர்யா.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்


எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map