சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கலையும் கருணையும்... அருண்மொழி தேவன்

கலையும் கருணையும்... அருண்மொழி தேவன்
Advertisement
எழுத்து அளவு
திரைப்படங்களில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து தற்போது வில்லனாக முன்னேறியுள்ளார் இளம் நடிகர் அருண்மொழி தேவன்.லொகேஷன் மேனேஜராக சிறப்பாக பணி செய்து வரும் இவர், வறண்ட மாவட்டம் என அடையாளப்படுத்தப்படும் ராமநாதபுரத்திலும் மனதை கொள்ளையடிக்கும் அழகிய இடங்கள் உள்ளன என சினிமாத் துறையினரின் கவனத்தை ராமநாதபுரம் பக்கம் ஈர்த்துள்ளார்.நடிகர் அருண்மொழி தேவன் கூறியதாவது:முதுகுளத்துார் கூவர்கூட்டம் கிராமம் சொந்த ஊர்.விவசாய கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவன். பி.இ., படித்துவேலைக்காக எனது அக்கா கணவர் கவிஞர் ஞானகரவேல் உடன் சென்னையில் தங்கியிருக்கும் அவரது உதவியால் சினிமா வாய்ப்பு கிடைத்தது. முதல் படமாக பாண்டியநாடு படத்தில் சிறிய ரோலில் நடித்தேன்.பிறகு கொம்பன், சண்டிவீரன், ராஜாமந்திரி, கூட்டத்தில் ஒருவன், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன,மதுரை வீரன், ஜூங்கா, க/பெ ரணசிங்கம், ராவணக்கோட்டம் படங்களில் நடித்துள்ளேன்.ஒரு படத்தில் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்துள்ளது. பெயர் முடிவாகவில்லை. தயாரிப்பாளர் பிரச்னையால் நின்றுள்ளது. மீண்டும் துவக்க வேலைகள் நடக்கிறது.நடிப்புடன் லொகேஷன் மேனேஜராகவும் 13 சினிமாக்களுக்கு பணிபுரிந்துள்ளேன். க/பெ ரணசிங்கம், கொம்பன், காரீ, ராவணக்கோட்டம், அறம் உள்ளிட்ட படங்கள் ராமநாதபுரம் கிராமங்களை சுற்றி எடுக்கப்பட்டவை.தற்போது சினிமாத்துறை பார்வை ராமநாதபுரம், ராமேஸ்வரம் பக்கம் திரும்பியுள்ளது.நான் பிறந்த மாவட்டமான ராமநாதபுரம் மக்களுக்கு உதவி செய்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது மனநிறைவை தருகிறது. கிடைக்கும் வருமானத்தில் அறக்கட்டளை துவங்கி கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு இலவசமாக கட்டிக்கொடுத்துள்ளேன்.திருட்டை தடுக்க எங்க ஊரில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த உதவி செய்துள்ளேன். இந்த கல்வி ஆண்டில் மிகவும் சிரமப்படும் 7 குழந்தைகளை எனது செலவில் படிக்க வைக்க உள்ளேன்.விஜய் சேதுபதி சிறிய வேடத்தில் நடிக்க துவங்கி இன்று ஹீரோவாக வளர்ந்துள்ளார், அவரை ரோல் மாடலாக கொண்டு வாய்ப்புகளை நழுவவிடாமல் நடித்து வருகிறேன். தற்போது சற்குணம் இயக்கத்தில் ஒரு வெப்சீரியல், விமல், தனுஷ் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறேன்.அரசியல் ஆசை இல்லை. கலை சேவையுடன் மக்கள் சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட


சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map