சிறப்புச்செய்திகள்:

பாவனைக்கு ஒரு பாலாஜி : பரவை தந்த புதிய பறவை

பாவனைக்கு ஒரு பாலாஜி : பரவை தந்த புதிய பறவை
Advertisement
எழுத்து அளவு
பல சினிமாக்கள் வெளியாவதும், அவை சிலநாட்கள் பேசப்பட்டு பின் மறந்து விடுவது போன்ற வழக்கமான சினிமாவாக இல்லாமல் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ள படம் சித்தா. இப்படத்தில் கதாநாயகனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உளவுத்துறை போலீசாராக நடித்து முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மதுரை அருகே பரவையை சேர்ந்த பாலாஜி. இவர் சித்தா படத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்மாமா கேரக்டரில் நடித்துள்ளார். இவர் படத்தில் வசனங்கள் இல்லாத காட்சிகளில் முக பாவனையிலே நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.பாலாஜி கூறியதாவது: மதுரையில் டிகிரி முடித்து சென்னையில் எம்.எஸ்.சி., வைராலஜி படித்தேன். படிக்கும் காலங்களில் சினிமாவில் நடிக்கும் சிந்தனை இல்லை. எனது அண்ணன் திரைத்துறையில் சாதிக்க தொடர் முயற்சிகள் செய்து கொண்டிருந்தார். அவர் குறும்படங்கள் இயக்கிய போது உறுதுணையாக கதை டிஸ்கஷன், படப்பிடிப்பு பணிகளில் அவ்வப்போது உதவுவேன். அப்போது நான் தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்திருந்த போதும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எட்டிப்பார்த்தது. பின்னர் சிந்துபாத் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அங்கு விஜய்சேதுபதியின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் நடிப்பதற்காக பயிற்சி வகுப்பில் சேர்ந்து நுணுக்கங்களை கற்றேன்.பின்னர் சித்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் உளவுத்துறை போலீஸ் கேரக்டரில் நடிக்க இயக்குனர் கூறினார். அந்த கேரடக்டரில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக உளவுத்துறையில் பணிபுரியும் சில போலீசாரிடம் அனுபவங்களை கேட்டறிந்தேன். சில நாட்கள் அவர்களுடனே பயணித்தேன் படப் பிடிப்பில் ஒரு காட்சியில் கண்ணீர் ததும்ப நடித்த போது அதை பார்த்து நடிகர் சித்தார்த் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வானது. படம் வெளியான பின் நடிப்பை பாராட்டி பலரும் வாழ்த்தியது உற்சாகத்தை தந்தது. பாலியல் தொந்தரவால் பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த படம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு படமாக அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.தமிழ் திரையுலகில் நடிப்பிற்கென்றே வந்திருக்கின்ற மதுரையின் பரவை தந்த இந்த புதிய பறவை பட்டொளி வீசி பறக்கட்டும்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

நட்சத்திரங்களின் பேட்டி

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால்

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

குடும்பம், காதல், ஆக் ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் ஜெயித்துக்காட்டி கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானவர். முதல் படம் ஜெயம்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map