சிறப்புச்செய்திகள்:

டியர் - விமர்சனம்

தயாரிப்பு - ஜி.வி.பிரகாஷ் குமார் | இயக்கம் - ஆனந்த் ரவிச்சந்திரன்

Published

on

டியர்

டியர்

2 மணி நேரம் 14 நிமிடம்
★★★★★
★★★★★
2.5
  • ஜி.வி.பிரகாஷ் குமார்
  • ஐஸ்வர்யா ராஜேஷ்
  • ஏப் 11, 2024
  • ஆனந்த் ரவிச்சந்திரன்
  • டியர் - டிஸ்டன்ஸ்…
Advertisement Ad

தயாரிப்பு - நட்மக் புரொக்ஷன்ஸ், ரோமியோ பிக்சர்ஸ்
இயக்கம் - ஆனந்த் ரவிச்சந்திரன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி - 11 ஏப்ரல் 2024
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

2023ல் தான் குறட்டை விடும் கதாநாயகனைப் பற்றிய படமாக குட்நைட் படத்தைப் பார்த்தோம். அதையே கொஞ்சம் மாற்றி யோசித்து குறட்டை விடும் கதாநாயகி பற்றிய படமாக இந்த டியர் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலேயே கதாநாயகிக்குக் குறட்டை என்பதைச் சொல்லிவிடுவதாலும், குட்நைட் படம் நமக்கு இன்னும் மறக்காததாலும் படத்தை ரசிப்பதில் ஆரம்பத்திலேயே ஒரு அழற்சி வந்துவிடுகிறது. மாத்தி யோசித்த இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம்.

டிவி சானலில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். தற்போது உள்ள டிவி சானலை விட பெரிய சேனல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, நாட்டின் நிதியமைச்சரை பேட்டி எடுப்பதுதான் அவரது லட்சியம். இருந்தாலும் அவரது அம்மா ரோகினி, அண்ணன் காளி வெங்கட் ஆகியோர் கட்டாயப்படுத்தி ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்து திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவுக்கு நன்றாக குறட்டை விடும் பழக்கம் இருப்பது ஜிவிக்குத் தெரிய வர அதிர்ச்சி அடைகிறார். எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை கட்டாயமாக வைத்திருப்பவர் ஜிவி. சரியாகத் தூங்க முடியாததால் அவருக்குக் கிடைத்த பெரிய சேனல் வேலையில் ஒரு சிக்கல் ஏற்பட்டு, துரத்தி விடுகிறார்கள். அந்த கோபத்தில் விவகாரத்து செய்ய முடிவெடுக்கிறார். இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நகைச்சுவைப் படமாகவும் இல்லாமல் சீரியஸான படமாகவும் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக நகர்ந்து போகிறது படம். இடைவேளைக்குப் பின் மெயின் கதையான ஜிவி - ஐஸ்வர்யா பிரிவை விட்டுவிட்டு, வீட்டை விட்டு எப்போதோ ஓடிப் போன ஜிவியின் அப்பாவை கதைக்குள் இழுத்து வந்திருக்கிறார்கள். சமீபகாலப் படங்களில் இப்படியான கிளைக் கதைகள்தான் மெயின் கதையின் சுவாரசியத்தைக் கெடுப்பதாக அமைந்து வருகின்றன.

ரெபல், கள்வன் படங்களுக்குப் பிறகு இந்தப் படத்திலும் அதே முகத் தோற்றத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். தூங்கி எழுந்து வந்தது போலவே படம் முழுவதும் வந்து போகிறார். உடனடியாக நல்ல ஹேர்ஸ்டைலிஸ்ட், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டைத் தேட வேண்டியது ஜிவிக்கு நல்லது. எந்த சேனலில் இப்படியான தோற்றத்தில் உள்ளவர்களை செய்தி வாசிக்க வைக்கிறார்கள் என்பது இயக்குனருக்குத்தான் தெரியும். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து செய்தியை படித்துவிட்டுப் போகிறார் ஜிவி.

ஜிவிக்கு அக்கா போலவே இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த ஒரு காட்சியிலுமே அவர்களுக்கான கெமிஸ்ட்ரி செட் ஆகவேயில்லை. இப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்குமா என யாருமே போட்டோஷுட் செய்யும் போது கூட யோசிக்கவில்லையா. அதிலும், ஜிவியை டேய் எனச் சொல்லி ஐஸ்வர்யா கூப்பிடுவதையாவது தவிர்த்திருக்கலாம். அது ஏதோ தம்பியை அதட்டிச் சொல்வது போலவே இருக்கிறது.

மிஸ்டர் பர்பெக்ட் ஆக இருப்பவர் காளி வெங்கட். மனைவியை அடிமையாகவே வைத்திருக்கிறார். அவரது மனைவியைப் பார்த்தால் ஐயோ பாவமாக இருக்கிறது. ஜிவியின் அம்மாவாக ரோகினி, அப்பாவாக தலைவாசல் விஜய். இவர்களது கதாபாத்திரத்தை வைத்து கடைசியில் கொஞ்சம் அட்வைஸ் செய்கிறார்கள். ஐஸ்வர்யாவின் அம்மாவாக கீதா கைலாசம், அப்பாவாக இளவரசு, வழக்கம் போல யதார்த்தமான நடிப்பு.

முந்தைய ஜிவியின் படங்களுக்கு சொன்னது போலத்தான் இந்தப் படத்திற்கும், தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கும் போதாவது இரண்டு, மூன்று சூப்பர்ஹிட் பாடல்களை யோசிப்பது இசையமைப்பாளர் ஜிவிக்கு அவசியத் தேவை.

இரண்டே கால் மணி நேரப் படத்தில் கால் மணி நேரப் படம் மட்டும் அழுத்தமான கதையாக இருந்தால் போதுமா ?. தூக்கத்தைத் தொலைத்து கொஞ்சம் யோசியுங்கள் புதிய இயக்குனர்களே.

டியர் - டிஸ்டன்ஸ்…

Advertisement

கருத்து பதிவு செய்ய

கருத்துகளை எழுதுங்கள்...

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Published on ஏப் 26, 2024
ரத்னம்

ரத்னம்

2.75/5
Published on ஏப் 28, 2024
பவி கேர்டேக்கர் (மலையாளம்)

பவி கேர்டேக்கர் (மலையாளம்)

2.75/5
Published on ஏப் 26, 2024
ஒரு நொடி

ஒரு நொடி

2.75/5
Published on ஏப் 20, 2024
சிறகன்

சிறகன்

2.5/5
Published on ஏப் 20, 2024
வல்லவன் வகுத்ததடா

வல்லவன் வகுத்ததடா

2.5/5
Published on ஏப் 11, 2024
ரோமியோ

ரோமியோ

2.5/5
Published on ஏப் 12, 2024
வருஷங்களுக்கு சேஷம் (மலையாளம்)

வருஷங்களுக்கு சேஷம் (மலையாளம்)

3/5
Published on ஏப் 13, 2024
ஆவேசம் (மலையாளம்)

ஆவேசம் (மலையாளம்)

3.25/5
Published on ஏப் 14, 2024
ஜெய் கணேஷ் (மலையாளம்)

ஜெய் கணேஷ் (மலையாளம்)

2.75/5
Published on ஏப் 11, 2024
டியர்

டியர்

2.5/5
Published on ஏப் 05, 2024
ஆலகாலம்

ஆலகாலம்

3/5
Published on ஏப் 06, 2024
ஒயிட் ரோஸ்

ஒயிட் ரோஸ்

2/5

மேலும் விமர்சனங்கள்

ரத்னம்

  • வெளியான தேதி : ஏப் 26, 2024
  • ரேட்டிங் : 2.75
ரத்னம்

தயாரிப்பு - ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், இன்வெனியோ ஆரிஜின்இயக்கம் - ஹரிஇசை - தேவிஸ்ரீபிரசாத்நடிப்பு -

பவி கேர்டேக்கர் (மலையாளம்)

  • வெளியான தேதி : ஏப் 28, 2024
  • ரேட்டிங் : 2.75
பவி கேர்டேக்கர் (மலையாளம்)

தயாரிப்பு ; திலீப்இயக்கம் ; வினீத் குமார்இசை ; மிதுன் முகுந்தன்நடிப்பு ; திலீப், ராதிகா சரத்குமார், ஸ்வாதி

ஒரு நொடி

  • வெளியான தேதி : ஏப் 26, 2024
  • ரேட்டிங் : 2.75
ஒரு நொடி

தயாரிப்பு - மதுரை அழகர் மூவிஸ், ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ்இயக்கம் - மணிவர்மன்இசை - சஞ்சய் மாணிக்கம்நடிப்பு -

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map