கொஞ்ச நாள் பொறு தலைவா... கோவைக்கு வருகிறார் தேவா!
எழுத்து
அளவு
தமிழ் சினிமாவுக்கும், கோவைக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இங்கிருந்த பட்சிராஜா, சென்ட்ரல் ஸ்டூடியோவில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.பல படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இசைக்கும், கோவைக்கும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியான தொடர்பு ஏதுமில்லை.ஆனால், இளையராஜா துவங்கி, ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆன்டனி என எல்லா பெரிய இசையமைப்பாளர்களும், இங்கே கச்சேரி வைத்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இசைக்கச்சேரிகளுக்கு இங்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, அடுத்து இங்கே கச்சேரி நடத்த வருகிறார், தேனிசைத்தென்றல் தேவா!வரும் ஏப்.,13ல், கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. அதற்குத்தான், "கொஞ்ச நாள் பொறு தலைவா!" என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.தேவா என்றால் கானா!தேவா என்றால் கானா...கானா என்றால் தேவா எனும் அளவுக்கு, தேவாவின் "கானா" பாடல்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆட்டம், பாட்டத்துடனான கொண்டாட்டம் என்றால், அங்கே தேவாவின் "கானா"வுக்கே முதல் மரியாதை.ஆனால் "கானா"வோடு நின்று விடாமல், தன் மெல்லிசையால் பல தேவ கானங்களையும் தமிழ் இசை ரசிகர்களுக்கு வழங்கியவர் தேவா.அதனால் தான், அவருக்கு இளசுகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். யூடியூப், இன்ஸ்டா, ஸ்பாட்டிபை என அனைத்து தளங்களிலும், அவரது பாடல்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.சென்னை, புதுச்சேரியில் தேவாவின் கச்சேரி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்து கோவையில் ஏப்.,13ல் நடக்கவுள்ளது.இந்த இசை நிகழ்ச்சியில், திரை இசை பிரபலங்கள் சபேஷ்-முரளி, அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி.,சரண், உண்ணி மேனன் மற்றும் விஜய் டி.வி., சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்று, கோவை ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.இந்நிகழ்ச்சிக்கான போஸ்டரை, சமீபத்தில் தேவா வெளியிட்டார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடக்கவுள்ள இந்த இசைக் கச்சேரிக்கு, கோவை மக்களிடம் வழக்கம் போல, அமோக வரவேற்பு இருக்கும் என்பது உறுதி!
கோலிவுட் செய்திகள்
நடிகை மஞ்சு வாரியர் சில வருடங்களுக்கு முன்பு வரை இருசக்கர வாகனம் கூட ஓட்டத் தெரியாமல் இருந்தார். அதன் பிறகு நடிகர் அஜித்துடன் துணிவு படத்தில் ஜோடியாக நடித்தபோது அவருக்கு பைக்
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, அதிக இடங்களில் வென்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சி தலைவர் நடிகர் விஜய், இன்று முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.