சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

நடிப்பில் மகான் அப்பா..: மனம் திறக்கும் துருவ் விக்ரம்

நடிப்பில் மகான் அப்பா..: மனம் திறக்கும் துருவ் விக்ரம்
Advertisement
எழுத்து அளவு
ஆட்டம் காட்டும் அந்நியன், அரவணைக்கும் அம்பி, அசத்தும் ரெமோ என கேரக்டர்களாகவே மாறி, "என்ன நடிப்புய்யா சும்மா பட்டைய கிளப்புறாருய்யா" என ரசிகர்களை ஆரவாரமாக ஆட்டம் போட வைக்கும் விக்ரம் உடன் "மகான்" படத்தில் நடித்த அவரது மகன் துருவ் விக்ரம் மனம் திறக்கிறார்....மகான் படம் பற்றி‛மகான்" படத்தில் அப்பா விக்ரம் "காந்தி மகான்" என்ற கேரக்டரில் வருகிறார். அது சிறு வயது முதல் 65 வயது வரை போகும். அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது கதை. அப்பா தான் ஹீரோ நான் அவருக்கு மகனாக சின்ன கேரக்டரில் நடிச்சிருக்கேன். படத்தில் உளவியல் ரீதியாக சிறிது சிரமப்பட்டு நடித்தேன்.அப்பாவிடம் கற்றது என்ன‛ஆதித்யா வர்மா" படத்திற்கு பின் அப்பா உடன் நடிக்கிறேன். இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன். தினமும் செட்டில் அவரிடம் ஏதாவது கற்றுக்கொண்டே தான் இருந்தேன். அவ்வளவு "எனர்ஜியா" இருக்காரு. எப்படி அடுத்தடுத்து நடிக்கிறார்னு பார்த்தேன். இரண்டு கேரக்டரும் வித்தியாசமா இருக்கும்வெளிநாட்டில் படிக்க போனீங்க... மீண்டும் நடிப்பில்...படிச்சு முடிச்சுட்டேன்... இப்போது முழுநேரம் சினிமாவில் தான் கவனம் செலுத்துறேன், மியூசிக் வீடியோ ஆல்பம் பண்ணனும்னு ஆசை இருக்கு விரைவில் அதுவும் நடக்கும்இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் வேலை பார்த்தது10வது படிக்கும் போது அவர் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். நான் அம்மா எல்லாம் அவரோட "பீட்சா" நைட் ஷோ பார்த்தோம். இரண்டாவது படமே அவர் இயக்கத்தில் நடித்தது சந்தோஷம்.துப்பாக்கி எல்லாம் பிடிச்சு பயங்கரமாக சண்டை...அப்பாவின் "பீமா", "சாமி" படங்கள் பார்த்து ஒரு நாள் துப்பாக்கி பிடிக்கணும்னு ஆசைபட்டேன். அந்த ஆசை "மகான்" படம் மூலமா நிறைவேறியது. இந்த படத்தில் அப்பாவுக்காக "ரப் வாய்ஸ் டப்பிங்" பேசியிருக்கேன்.இரண்டு பேரும் அண்ணன், தம்பி மாதிரி இருக்கீங்கநிறைய பேரு அப்படி தான் சொல்றாங்க... பசித்தாலும் சாப்பிடாமல் உடம்பை மெயின்டெய்ன் பண்ணுவார். "நீங்கள் ரொம்ப கடுமையாக உழைச்சிட்டிங்க போதும்ப்பா"னு சொல்லி இருக்கேன். அப்பா 60 படங்களில் நடித்துள்ளார். ஆனால் "மகான்"னில் 60 படங்களில் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது.அப்பாவிடம் இருந்து பின்பற்ற வேண்டிய விஷயங்கள்அப்பா செட்டுக்குள்ள வரும் போதே போன் வச்சுட்டு, எல்லா விஷயத்தையும் மறந்துட்டு அந்த கேரக்டராக மாறி விடுவார். அவர் நடிப்பில் ஒரு மகான்; நான் கொஞ்சம் சோம்பேறி, அவர்கிட்ட இருந்து கடின உழைப்பை நான் பின்பற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்


எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map