பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம்

பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம்
Advertisement
எழுத்து அளவு

1959ம் ஆண்டு, சிவாஜி, அஞ்சலி தேவி நடிப்பில் வெளிவந்த படம் "நான் சொல்லும் ரகசியம்". பி.ஸ்ரீதர் ராவ் இயக்கியிருக்கிறார். இசை ஜி.ராமனாதன். படத்தின் கதை அருமை, ஆனால் திரைக்கதை சொதப்பல் காரணமாக படம் தோல்வி அடைந்ததாக அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது

பணக்காரர் தங்கவேலுவின் மகன் சிவாஜி. ஆனால் சிவாஜிக்கு பணக்காரத்தனமான வாழ்கை பிடிக்கவில்லை. இதை பயன்படுத்தி சிவாஜியின் தம்பி எஸ்.ஆர்.தசரதன் முழு சொத்துக்களையும் அபகரிக்க நினைக்கிறார். ஒரு நாள் விட்டை விட்டு வெளியேறும் சிவாஜி ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் மயங்கி விழுகிறார். அங்கே வரும் திருடர்கள் அவரது விலை உயர்ந்த ஆடையை திருடிச் சென்று விடுகிறார்கள்.

கண் விழிக்கும் சிவாஜி சைக்கிள் ரிக்ஷாவில் இருக்கும் பழைய கந்தலான உடையை அணிந்த கொள்கிறார். மறுநாள் அவரை ரிக்ஷாக்காரனாக நினைக்கும் நாயகி அஞ்சலிதேவி ரிக்ஷா சவாரிக்கு அழைக்கிறார். அவரும் செல்கிறார். அந்த எளிய வாழ்க்கை அவருக்கு பிடித்துப்போகிறது. குடிசை பகுதியில் வாழ்கிறார். பின்னர் அஞ்சலி தேவியை காதலிக்கிறார்.

அஞ்சலி தேவிக்கும், அவரது தந்தைக்கும் பணக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி பணக்காரர் என்று தெரியவரும்போது என்ன நடக்கிறது. மகனை பற்றி கேள்விப்படும் தந்தை தங்கவேலு "நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள் அஞ்சலிதேவி மட்டும் வேண்டாம்" என்கிறார். இந்த இரண்டுக்கும் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது, அது என்ன என்பததான் படத்தின் முக்கிய பகுதி.

படத்தில் சந்திரபாபு, தங்கவேலு தொடர்பான காமெடி காட்சிகள் நன்றாக வந்திருந்ததால் அந்த காட்சிகளை அதிகரித்து முக்கிய காட்சிகளை குறைத்து விட்டார்கள். சிவாஜி ரிக்க்ஷகாரனாக இருக்கும் போர்ஷன் நன்றாக இருந்ததால் கதையை விட்டு படம் விலகி சென்றது. இப்படியான பல திரைக்கதை சொதப்பல்களால் படம் படுதோல்வி அடைந்தது. நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை சரியாக அமையாவிட்டால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படம் இப்போதும் ஒரு உதாரணமாக இருக்கிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map