என் காதல்... : பிரியமான பிரியங்கா மோகன் பேட்டி
தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைகடவுள் ஆசியால் எனக்கு நிறைய படங்கள் தமிழில் வருகிறது. வந்த படத்தில் எந்த கதை பிடிச்சிருக்கோ எந்த கேரக்டர் எனக்கு சரி ஆகுமோ அந்த மாதிரி கதைகளில் நடிக்கிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்.நடிப்பு தவிர சினிமாவில் வேற எந்த துறையில் ஆசை இருக்குஇயக்கத்தில் ஆசை இருக்கு. அதே சமயம் ஒளிப்பதிவும் ஆர்வம் உண்டு. ஆனால் இப்போதைக்கு நடிப்பு மட்டுமே.சினிமாவிற்கு வரும் புதியவர்களுக்கு சொல்ல விரும்புவதுசினிமாவுக்கு வர ஆசை இருக்கும். ஆனால் பொறுமை முக்கியம். எந்த ரோல், எந்த படம் என, நமக்கு முதலில் பிடிக்குதான்னு பார்த்து ஒரு முடிவை எடுக்கணும்.
யாரையேனும் காதலிக்கிறீர்களாஇப்போ சினிமா மீது தான் காதல்! நிறைய படங்கள் நடிக்கணும். திருமணம், கண்டிப்பாக சொல்லிட்டு தான் செய்வேன்கிளாமர் ரோல்...எனக்கு ஒரு எல்லை வைத்துள்ளேன். அதுக்கு மேல என்னால் முடியாது. வெறும் உடலை, தோலை காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லைஅடுத்தடுத்த படங்கள்பொங்கல் திருநாளில் முதல் முறையாக என் படம், "கேப்டன் மில்லர்" வெளியாவது மகிழ்ச்சி. முதல் முறையாக இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். அம்பாசமுத்திரம், குற்றாலம், மதுரையில் படப்பிடிப்பு நடந்தது. தனுஷ் உட்பட பலரும் அந்த ஊர் பெண்ணைப் போல நான் இருப்பதாக சொன்னார்கள். அடுத்து தெலுங்கில் பவனுடன் ஒரு படம், நானி உடன் ஒரு படம். ஜெயம் ரவியுடன் "பிரதர்" என்ற படம் முடிந்து விட்டது.
நட்சத்திரங்களின் பேட்டி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.