சிறப்புச்செய்திகள்:

மாஸ் காட்டும் கடுவா : பிரியமுடன் பிரித்திவிராஜ்

மாஸ் காட்டும் கடுவா : பிரியமுடன் பிரித்திவிராஜ்
Advertisement
எழுத்து அளவு
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நடிப்பில் முத்திரை பதித்து மீண்டும் மலையாளத்தில் பிஸி நடிகராக கலக்கி "கடுவா" என்ற ஆக் ஷன், மாஸ் படத்தில் தெறிக்கவிடும் இயக்குனர், நடிகர் பிரித்திவிராஜ் மனம் திறக்கிறார்.ஐயப்பனும் கோஷியும், ஜனகன மன, கடுவா என வரிசையாக வெற்றிப்படங்கள் தருகிறீர்களேஎன் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது சந்தோஷம். கடுவா (புலி) புத்துணர்ச்சி தரும் படமாக அமைந்தது. சமூகத்திற்கு தேவையான, கதைகள் மலையாளத்தில் வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு மாஸ், படம் நடித்துள்ளேன்.கடுவா எந்த காலகட்ட கதை1990ல் கோட்டயம் அருகே பாலா என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவம் தான் "கடுவா" கதை. படத்தோட ஸ்டைலில் ஒரு பீரியட் படம் மாதிரி நாயகனின் மீசை, மலையாளிகளுக்கே உரிய வேட்டி என எல்லாமே 1990ல் நடந்ததை கண்முன் கொண்டுவரும்.இயக்குனர் ஷாஜி கைலாஷ் நிறைய ஹிட் தந்தவராச்சே... 2009ல் அவரிடம் பேசும் போது அவர் சினிமாவை விட்டு தள்ளி இருந்தார். நீங்க முதல்ல ஸ்கிரிப்ட் படிங்க; பின் கூறுங்கள் படம் பண்ணலாம் என கூறினேன். கதையை படித்த பின்நான் இயக்குகிறேன் என்றார். இது ஷாஜி கைலாஷின் மாஸ் படமாக வந்திருக்குசொந்தமாக படங்கள் தயாரிப்பது குறித்து பிரித்திவிராஜ் புரடக்சன் சார்பில் டிரைவிங் லைசென்ஸ் படம் எடுத்தோம். பெரிய ஹிட் ஆச்சு. அந்த வெற்றிக்கு பின் "ஜனகனமன", "கடுவா", "கோல்ட்" படங்கள் எடுக்கிறோம். அடுத்து ஹிந்தி படம். படப்பிடிப்பு முடிந்துள்ளது, அக் ஷய் குமார் நடித்துள்ளர்.அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் உடன் நான் ஹீரோக்களுக்கு படம் பண்ணும் இயக்குனர் இல்லை. ஒரு கதை எழுதிய பின் யாரை வைத்து ஆரம்பிக்கலாம் என முடிவு செய்வேன். கதைக்கு யார் பொருத்தமோ அவரிடம் பேசுவேன். நடிகருக்கு கதை பிடித்தால் ஓகே.தமிழ் படங்களில் ஏன் இவ்வளவு இடைவெளி நல்ல கதைகள் எனக்கு வரவில்லை என்பது தான் உண்மை. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நேரத்தை ஒதுக்கி, கதை பண்ணும் அளவுக்கு சந்தோஷப்படுத்தும் கதைகள் தேடி வருவதற்காக காத்திருக்கிறேன்.மலையாள சினிமாவில் ஒரிஜினலான கதைகள்நீங்கள் கேட்பது நல்ல மலையாள படங்கள் குறித்து ... மோசமான படங்கள் செய்தியில் வருவது இல்லை. சில கதைகள் ஒரிஜினலாக வரும் போது சந்தோஷம் தான். நிறைய பெரிய எழுத்தாளர்கள், படைப்பாளிகள் நடிக்கிறார்கள். சமீபத்தில் மலையாள சினிமாக்கள் அதிகம் கவனிக்கப்படுகிறது.நேரிலும், படத்திலும் வித்தியாசமாக தெரியுகிறீர்களே நான் அவ்வளவு மென்மையான ஆள் இல்லை. என் படங்கள் இப்படி தான் இருக்கும் என யாரும் முடிவு செய்துவிட கூடாது, ஜனகன மன, ப்ரோடாடி, கடுவா, கோல்ட் படங்களில் வித்தியாசமான கேரக்டர்கள் தான்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

நட்சத்திரங்களின் பேட்டி

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால்

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

குடும்பம், காதல், ஆக் ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் ஜெயித்துக்காட்டி கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானவர். முதல் படம் ஜெயம்

Advertisement

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map