பத்து நாள் ராஜாவாக சதீஷ்

பத்து நாள் ராஜாவாக சதீஷ்
Advertisement
எழுத்து அளவு

நகைச்சுவை நடிகர் சதீஷ் கடந்த சில வருடங்களாக மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்த்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கூகுள் குட்டப்பா, கார்டியன் ஆகிய படங்களை இயக்கிய குரு சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் என இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புதிய வருடப்பிறப்பில் இந்த படத்திற்கு "பத்து நாள் ராஜா" என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். சதீஷ் சட்டையில் ஆங்காங்கே ரத்த கரைகள் படிந்திருக்க ஒரு கையில் காய்கறி பை மற்றொரு கையில் சாப்பாடு பை என கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய தோற்றத்தில் உள்ளார்.

இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கிறார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map