சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

நீங்களா அந்த குட்டி பொண்ணு: ஆச்சர்யமூட்டும் ஷாத்திகா

நீங்களா அந்த குட்டி பொண்ணு: ஆச்சர்யமூட்டும் ஷாத்திகா
Advertisement
எழுத்து அளவு


சிறு வயதிலேயே நடிப்பு திறமையால் மக்களை ஈர்த்த நடிகை ஷாத்திகா. இவர் இரண்டு வயதிலிருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றிநடை போடுகிறார். இவர் கூறியதாவது:

நான் பிறந்து வளர்ந்தது சென்னை. என் சினிமா பயணம் நான் குழந்தையாக இருக்கும் போதே தொடங்கியது. 2 வயதாக இருக்கும் போது அம்மா எனக்கு பிறந்தநாள் வாழ்த்து விளம்பரம் கொடுக்க ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது உதவி இயக்குநர் ஒருவர் என் புகைப்படத்தை பார்த்து சத்யராஜ் நடிக்கும் "வீரநடை" படத்தில் குஷ்புவிற்கு அக்கா மகள் கதாபாத்திரத்தில் நடிக்க இந்த குழந்தையை அனுப்ப முடியுமா என கேட்டார். அம்மாவும் சம்மதிக்க அங்கிருந்து தொடங்கியது என் சினிமா பயணம்.

விஜயகாந்துடன் "சொக்கதங்கம்", மம்மூட்டியுடன் "ஆனந்தம்", சரத்குமாருடன் "சமஸ்தானம்", கார்த்திக்குடன் "ரோஜாவனம்", விஜய்யுடன் "குருவி" என பல்வேறு நடிகர்களுடன் 30க்கும் மேலான படங்களில் குழந்தை நட்சத்திரம், சகோதரி என நடித்துள்ளேன். பின் சீரியல்களில் வாய்ப்பு வந்தது.

"மங்கை" சீரியலில் ஆரம்பித்து கோலங்கள், மைடியர் பூதம், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட 25க்கு மேலான சீரியல்களில் நடித்துள்ளேன். காஞ்சனா, சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகைகளுக்கு தமிழ், தெலுங்கில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளேன்.

பின்னர் நடிப்பிற்கு பிரேக் கொடுத்து பி.டெக்., எம்.பி.ஏ., முடித்தேன். மீண்டும் சினிமாவிற்குள் வர முயன்றேன். அது நிறைவேறவில்லை என்றாலும் நம்பிக்கையோடு காத்திருந்தேன். பின்னர் "பாரதி கண்ணம்மா" சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. "மகாநதி" சீரியலில் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

எத்தனையோ ஆடிஷன்களில் நிராகரிப்பை சந்தித்துள்ளேன். இருந்தாலும் கலங்கியதில்லை. காரணம் என் அம்மா தான். என் ஊக்கசக்தியாக என்னை வழி நடத்துகிறார். நான் துவளும் போது என்னை தாங்குகிறார். அதனால் கஷ்டங்களை கடந்து வருவது கடினமாக தெரியவில்லை. இன்னும் சினிமாவில் என்னை நிரூபித்து கொண்டு இருக்கிறேன்.

இன்றும் என்னை பார்க்கும் ரசிகர்கள் "நீங்களா அந்த குட்டி பொண்ணு" என என் மீது அன்பு செலுத்துகின்றனர். ஹீரோயினாக வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன்.

எனக்கு போட்டோ ஷூட்கள் எடுப்பதில் ஆர்வம் இருப்பதால் ஷூட்கள் நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன். மக்கள் நம்மீது வைக்கும் அன்பை ஊக்கமாக நினைக்கிறேன், என்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட

மேலும் படிக்க

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்

மேலும் படிக்க

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map