என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர்

என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர்
Advertisement
எழுத்து அளவு

‛கஞ்சா பூ கண்ணால செப்பு சிலை உன்னால" என ரசிகர்களை கிறங்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்துவிட்டு ஆக்டராக வலம் வருபவர் தித்திக்கும் இந்த பொங்கலுக்கு ‛நேசிப்பாயா" படத்துடன் தினமலர் பொங்கல் மலருக்கு அளித்த இனிப்பான பேட்டி...

* நேசிப்பாயாவில் என்ன ஸ்பெஷல்?
விஷ்ணுவர்தன் முதல் முறையாக படம் முழுக்க ஒரு காதல் கதையை இயக்கி உள்ளார். இந்தக்கால காதலர்களின் உறவு, எதிர்பார்ப்பு, பிரிவு எல்லாம் கலந்தது தான் நேசிப்பாயா. எனக்கு முதல் காதல் படம். பொங்கலுக்கு புது லவ் ஸ்டோரியை பார்ப்பீங்க.

* பொங்கலுக்கு உங்க படம் எப்படி பீல் பண்றீங்க?
அப்பாவின் கேம் கேஞ்சர், என் படம் ரிலீஸ் என இந்தாண்டு எனக்கு டபுள் ஸ்பெஷல்.



* புதுமுக நடிகருடன் நடித்தது ஏன்?
நான் புதுமுகமாக வந்தப்போ கார்த்தி, சிவகார்த்திகேயன் ஓகே சொன்னாங்க. அதுமாதிரி தான். விஷ்ணுவர்தன் படம் என்பதால் எதுவும் கேக்கல. ஆகாஷிற்கு இது முதல் படம் போலவே தெரியாது; நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.

* ஷங்கரின் மகள் என்ற அடையாளம் உதவுதா?
ஷங்கரின் மகள் என்பது பெருமை. அவர் பெயரை வைத்து வாய்ப்பு பெறவில்லை. நானே ஆடிஷன் சென்று வாய்ப்பு பெறுகிறேன். சினிமாவிற்கு வந்த பின் அப்பா மேல் மரியாதை கூடியிருக்கு.

* டாக்டர்... ஏன்டா சினிமாவுக்கு வந்தோம்னு நினைத்தது உண்டா?
சினிமாவில் ஜெயிக்கலாம், தோற்கலாம், நம் கையில் இல்லை; மக்கள் முடிவு பண்ணனும். படிச்சுட்டு இரண்டு வருஷம் அப்பாகிட்ட டைம் கேட்டேன். சினிமா செட்டாகவில்லை என்றால் மேற்படிப்புக்கு போறேனு சொன்னேன். இப்போதைக்கு சரியாக போகிறது.



* பணமா, கதையா அதிதியின் தேர்வு எது?
காசுக்காக சினிமாக்கு வரல. ஒரு கதை கேட்டு என்னை மறந்து அந்த காட்சியில் நான் இருந்தால் நடிப்பேன். பெரும்பாலும் கதையை நானும், என் மேனேஜரும் கேட்போம். எப்போதாவது அம்மா கேட்பாங்க. கடைசியாக அப்பாவிடம் எடுத்து செல்வேன்.

* அதிதியின் ஆசை?
முழுமையான ஒரு வரலாற்று படத்தில் நடிக்கணும்.

* அப்பா படத்தில் எப்போது நடிப்பீங்க?
சீக்கிரமே நடக்கும், காத்திருக்கிறேன்.

* அடுத்தடுத்த படங்கள் பற்றி?
தமிழில் அர்ஜூன் தாஸ் படம், தெலுங்கில் சாய் ஸ்ரீநிவாஸ் உடன் ஒரு படம் நடிக்கிறேன். தெலுங்கில் கலர் புல்லா கிராண்டா எடுக்குறாங்க.



* உங்க வீட்டில் பொங்கல் பண்டிகை எப்படி?
அம்மாவின் பொங்கல் ஸ்பெஷல். குடும்பத்தோடு பட்டிமன்றம் பார்ப்போம். தியேட்டருக்கு போவோம். ஜாலியா பொழுது போகும். நானும் ஓரளவுக்கு சமைப்பேன். அம்மா, பாட்டி சொல்லி தந்தது போக, யுடியூப் பார்த்து புது டிஷ் கத்துக்கிட்டேன்.

* எப்பவுமே இப்படித்தான் துறுதுறுனு இருப்பீங்களா?
என் குணம் இது தான், எப்பவும் இப்படித்தான் கலகலனு எனர்ஜியா இருப்பேன்.

* தம்பி பற்றி?
விஸ்காம் முடிச்சிருக்காரு. அப்பா, வெற்றிமாறன், முருகதாஸிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார். அவருக்கு நடிப்பிலும் ஆர்வம் இருக்கு.



* பிடித்த நடிகர், நடிகை
ரஜினி, நித்யா மேனன். ரீசென்ட்டா சாய் பல்லவி

* பெண்களுக்கு சொல்ல விரும்புவது
நிறைய பெண்கள் தைரியமாக முன்வந்து பிரச்னைகளை பேசுறாங்க. பெண்கள் பாதுகாப்பாக இருக்கணும்.

* விஜய் அரசியல் வருகை
அவருக்கு வாழ்த்துகள், அவ்வளவுதான்


Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map