சிறப்புச்செய்திகள்:

ராசி பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ?

ராசி பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ?
Advertisement
எழுத்து அளவு
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என "கமாண்டர்" நடிகரை அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். "ராசி" பெயர் கொண்ட தனது அடுத்த படத்தில் "சிறைக்காப்பாளர்" படத்தை விடவும் அதிக வசூலைப் பெற்றாக வேண்டும் என்று தனது படைத் தொண்டர்களிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தாராம். "சிறைக்காப்பாளர்" இசை வெளியீட்டு விழாவில் அதன் நடிகர் பேசிய பேச்சுக்கள் "கமாண்டர்" நடிகரை கோபம் கொள்ள வைத்துள்ளதாம். தன்னையும் தனது ரசிகர்களையும் வேண்டுமென்றே இழிவு படுத்தியதாக அவர் நினைக்கிறாராம்.இந்த சூழலில் தனது "ராசி" படத்தின் இயக்குனர் "சிறைக்காப்பாளர்" பட நாயகனுடன் படம் இயக்கும் அறிவிப்பு வந்ததும் "கமாண்டர்" நடிகரை கோபம் கொள்ள வைத்துள்ளதாம். அதனால் தனது "ராசி" பட இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேச முடியாது என்பதும் ஒரு காரணம். அந்த இயக்குனரை பக்கத்தில் வைத்துக் கொண்டே விமர்சிக்க முடியாது. எனவேதான் விழாவை ரத்து செய்யச் சொல்லிவிட்டாராம். இது ஒரு புறமிருக்க குடும்ப விவகாரம் ஒன்றும் விழாவை ரத்து செய்ய வைக்கக் காரணமாக இருந்தது என்கிறார்கள்.சமீபத்தில் மூன்று எழுத்து நடிகையுடன் வெளிநாடு சுற்றுலா எல்லாம் சென்றுவந்தார் "கமாண்டர்" நடிகர் என்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. அதனால், "கமாண்டர்" குடும்பத்தினர் கடும் கோபத்தில் உள்ளார்களாம். கமாண்டரும் அவரது குடும்பத்தினரும் பிரிந்தே இருக்கிறார்கள். அதன் காரணமாக கமாண்டரின் மனைவி விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பேயில்லை. அடுத்து அரசியல் என்று காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் மனைவி விழாவுக்கு வராமல் போனால் அது அவரது இமேஜை மேலும் பாதிக்கும் என கடைசி நேரத்தில் யாரோ ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அடுத்து திரைப்பட இயக்குனராக களமிறங்க உள்ள வாரிசும் விழாவுக்கு வராமல் போனால் அதுவும் சர்ச்சையைக் கிளப்பும். இப்படி பல விஷயங்கள் பின்னணியில் இருப்பதை மறைக்க, அரசியல் அழுத்தம்தான் காரணம் என பரப்பச் சொல்லி அதன்படி நடந்து வருகிறதாம்.விரைவில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து "கமாண்டர்" நடிகருக்கு கடும் எச்சரிக்கை பறக்கும் என்கிறது அரசியல் வட்டாரம்.
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

Advertisement

சினி வதந்தி

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் நடித்து வந்த, இரண்டாம் பாகம் படம், டிராப் ஆகிவிட்டது. மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன்... என்று சொல்லி, சில நாட்கள் படப்பிடிப்பு

தமிழில் மூடப்படும் பிரபல ஓடிடி தளம் ?

தமிழில் மூடப்படும் பிரபல ஓடிடி தளம் ?

பாராட்டுக்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த

அடிக்கடி எஸ்கேப் ஆகும் சங்க செயலாளர்

அடிக்கடி எஸ்கேப் ஆகும் சங்க செயலாளர்

நடிகர்கள், நடிகைகள் சரியாக படப்பிடிப்புகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தால் அது பற்றி புகார் அளிப்பதற்கு ஒரு சங்கம் இருக்கிறது. ஆனால், அந்த சங்கத்தின் செயலாளரே காணாமல் போனால்

Advertisement Ad

Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map