சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி

கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி
Advertisement
எழுத்து அளவு

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. சினிமா தாண்டி அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். விரைவில் உலகம் முழுக்க இசை சுற்றுப்பயணம் செல்கிறார். அதோடு அவர் பண்டைய தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வைத்து அகழ்வாராய்ச்சியும் செய்கிறார். இதை வைத்து ஆவணப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆதி, ‛‛நடிப்பு, இசை இரண்டையும் கஷ்டமாக பார்க்கவில்லை. இதற்கு தான் வாழ்க்கையில் ஆசைப்பட்டேன். நடிப்பு, இசை இரண்டும் வேறு வேறு. இசை உடன் ஒப்பிடும்போது நடிப்பு கொஞ்சம் கஷ்டமானது. காரணம் அதற்காக நிறைய மெனகெட வேண்டி உள்ளது. ஆனால் இசை எனக்குள்ளேயே இருப்பதால் கொஞ்சம் ஈஸியாக உள்ளது.

ஒருகாலத்தில் ஆல்பம் என்றால் என்ன என்று கேட்டாங்க. இன்றைக்கு சினிமா பாடல்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்களும் மக்களிடம் வரவேற்பு பெறுகிறது. வெளிநாடுகள் போன்று இனி இங்கேயும் ஆல்பத்திற்கு தனித்துறை வரும். அடுத்து ஜோ பட இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கும் ஒரு படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். இதற்காக மூன்று மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். ஜுன் அல்லது ஜுலையில் படப்பிடிப்பு துவங்கும். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பாடல் கம்போசிங் நடக்கிறது. ஒரு பாடல் ரெடியாகிவிட்டது"" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் தாய் கிழவி

2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் தாய் கிழவி

2026ம் ஆண்டின் நான்கு மாதம் கடந்து போய்விட்டது. இந்த நான்கு மாதங்களில் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாக அமைந்தது. அவற்றில் தாய் கிழவி, யூத், வித்

மேலும் படிக்க

ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்…

ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்…

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை பிரச்னை காரணமாக வெளியாகவில்லை. இப்படம்

மேலும் படிக்க

பெத்தி டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம்

பெத்தி டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம்

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பெத்தி. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map