சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி

நடிகைகளுக்கு காதலிக்க மட்டும் தான் தெரியுமா...? பார்வதி கேள்வி
Advertisement
எழுத்து அளவு
தமிழில் சசி இயக்கிய பூ என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன்பிறகு சென்னையில் ஒரு நாள், மரியான் , பெங்களூர் நாட்கள், தங்கலான் என பல படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். பார்வதி அளித்துள்ள ஒரு பேட்டியில், படத்துக்கு படம் நடிகைகளை ஹீரோவை காதலிக்கும் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் . அவர் கூறுகையில், ‛‛நான் நடிக்க வந்த 7 வருடங்களாக எனக்கு வந்தது எல்லாமே காதல் கதைகள்தான். படத்துக்கு படம் ஹீரோக்களுடன் டூயட் பாடி சலிப்பு ஏற்பட்டது. நடிகைகள் என்றால் காதலிக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைப்பது தவறு. எங்களைப் போன்றவர்களுக்கும் சமூக நோக்கமுள்ள கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும். அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதன் பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினேன்.திரையுலகில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் இருக்க கூடாது. ஆண்கள் பிரச்னை, பெண்கள் பிரச்னை என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், மனிதர்களை மையப்படுத்திய பிரச்னை, மனிதர்கள் சம்பந்தப்பட்ட கதைகள் என்ற மனநிலையுடன் இயக்குனர்கள் கதைகளை உருவாக்க வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும் அது சமூக பிரச்னையாகவே பார்க்க வேண்டும். குறிப்பாக பெண்களின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் பார்வதி.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு

தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருப்பது போன்று


பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ராம்சரண் நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் படம் பெத்தி. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின்


அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

பைசன் படத்துக்குபின் தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்காத ஜானரில் அந்த படம் உருவாக போகிறது. அதற்கான பட்ஜெட்டும் மிக அதிகம் என கேள்வி. இப்படிப்பட்ட

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map