வில்லனாக மாறிய சேரன்

வில்லனாக மாறிய சேரன்
Advertisement
எழுத்து அளவு

இயக்குனர் சேரன் நரிவேட்டை என்ற மலையாள படத்தில் சற்றே வில்லத்தனமான போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த அந்த படம் தமிழிலும் டப்பாகி நேற்று வெளியாகி உள்ளது. வயநாட்டில் நில உரிமைக்காக போராடும் பழங்குடி மக்களை அடக்க ஒரு போலீஸ் டீம் செல்கிறது. அதில் அதிகாரியாக இருப்பவர் சேரன். சாதாரண போலீசாக இருப்பவர் டொவினா. அங்கே கலவரம் வெடிக்க என்ன நடக்கிறது என்பது கதை. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சற்றே நெகட்டிவ் ரோலில் சேரன் நடித்த படம் இது. எப்படி நடிச்சீங்க என்றால், ‛இஷ்க் என்ற அருமையான படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர், அவரின் அடுத்த படம் இது. என் கேரக்டர் பிடித்து இருந்தது. தவிர, படத்தில் சொல்லப்படும் கரு அழுத்தமானது. அதனால், நரிவேட்டையில் அப்படி நடித்தேன். இயக்குனர்தான் என்னை அந்த ரோலுக்கு தேர்ந்தெடுத்தார். இதே தேதியில் என்னுடைய ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் ஆக இருந்தது. ஒரே நேரத்தில் 2 போட்டி வேண்டாம் என்று, அந்த பட தேதியை ஒத்தி வைத்துவிட்டேன்" என்கிறார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map