கூலி படப்பிடிப்பு நிறைவு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் "கூலி". இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு 2023ம் வருடம் வெளிவந்து, படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஒரு வீடியோவுடன் வெளியானது. கடந்த வருடம் ஜுலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தொடர்ந்து பல்வேறு கட்டங்களாகப் படப்பிடிப்பு நடந்து வந்தது.
ஐதராபாத், விசாகப்பட்டிணம், ஜெய்ப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்தது. சுமார் 9 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார்கள். இப்படத்தில் ஹிந்தி நடிகர் ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.
2025ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
கோலிவுட் செய்திகள்
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்
தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்
சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.