அபினய்-க்கு உதவிய தனுஷ்

அபினய்-க்கு உதவிய தனுஷ்
Advertisement
எழுத்து அளவு

தனுஷ் அறிமுகமான ‛துள்ளுவதோ இளமை" படத்தில் அவருடன் சமமான ரோலில் நடித்தவர் அபினய். அதன்பின் சில படங்களில் நடித்தார். பின்னர், பல ஆண்டுகள் காணாமல் போனார். சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிற, மருத்துவ சிகிச்சை எடுக்கிற போட்டோ வைரல் ஆனது. இது அபினய் தானா என்று கேட்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இருந்தது.

கல்லீரல் பிரச்னையால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அவருக்கு கேபிஓய் பாலா ஒரு லட்சம் கொடுத்து உதவினார். நண்பர்கள் சிலரும் உதவி உள்ளனர். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதாம். இதற்கு 30 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. ஆனால் அவர் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார். இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளாராம்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map