பிளாஷ்பேக் : ரஞ்சனுடன் நேரடியாக மோதிய எம்.ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கே சிம்ம சொப்பனமாக இருந்தவர் ரஞ்சன். பணக்கார வீட்டு செல்ல மகன், நிறைய படித்தவர், குதிரையேற்றம், வாள் சண்டை, குத்து சண்டை, விமான பைலட் என நிறைய தகுதிகள் அவரிடம் இருந்தது.
ரஞ்சனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு பனிப்போர் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஞ்சன் ஹீரோவாகவும், எம்.ஜி.ஆர் வில்லனாகவும் நடித்த படம்தான் "சாலிவாகனன்". இதில் சாலிவாகனனாக ரஞ்சனும், விக்ரமாதித்தனாக எம்ஜிஆரும் நடித்தனர்.
இருவரும் வாள் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி இருந்தது. இதில் முறைப்படி வாள் சண்டை கற்ற ரஞ்சனுக்கு எதிராக எம்ஜிஆர் நாடகத்தில் கற்றதை வைத்து மோதினார். இருவரும் நிஜமாகவே மோதிக் கொண்டார்கள். ரஞ்சன் மூர்கத்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துவதாக எம்ஜிஆரும், எம்ஜிஆர் மூர்க்த்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்துதாக ரஞ்சனும் மாறி மாறி இயக்குனரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு சண்டை இயக்குனர் சொல்படி மட்டுமே நடந்து கொள்வது என்று முடிவாகி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
பி.என்.ராவ் இயக்கிய இந்த படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, கே.எல்.வி.வசந்தா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.எஸ்.பாலையா மற்றும் பலர் நடித்தனர். நாகர்கோவில் கே.மகாதேவன் இசை அமைத்தார். இது 1944ல் தயாரிக்கப்பட்டு 1945ன் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.
கோலிவுட் செய்திகள்
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.