சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரின் நிஜ ஹீரோ

பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரின் நிஜ ஹீரோ
Advertisement
எழுத்து அளவு

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஹீரோக்களை உருவாக்கியவர். ஆனால் அவர் நிஜயத்தில் ஹீரோவாக பார்த்தது டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை. 80களில் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மனிதராக இருந்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி . "மோட்டிவேஷன்" என்பதை தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். இவரின் படைப்புகள், எழுத்துகள் அன்றைய இளைஞர்களின் தாரக மந்திரம்.

எம்.எஸ்.உதயமூர்த்தி, இயக்குநர் கே.பாலசந்தரின் கல்லூரித் தோழர். இவரின் "மக்கள் சக்தி இயக்கம்" தந்த ஈர்ப்பாலும் பாதிப்பாலும் கே.பாலச்சந்தர் இயக்கிய படம்தான் "உன்னால் முடியும் தம்பி". கே.பாலச்சந்தர் பயோபிக் படங்கள் எதையும் இயக்கியதில்லை. உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தியின் பயோபிக் படம் இல்லையென்றாலும் அவரது தத்துவங்களை பேசிய படம்.

படத்தின் நாயகனாக நடித்திருந்த கமல்ஹாசனின் பெயரும் உதயமூர்த்திதான் படத்தில் கமல்ஹாசன் பேசிய அனைத்தும் உதயமூர்த்தியின் வார்த்தைகள்தான். "உன்னால் முடியும் நம்பு தம்பி", "நம்பு தம்பி நம்மால் முடியும்", "நம்மால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்?" என்பன போன்ற உதயமூர்த்தியின் வாசகங்கள்தான் படத்தின் கரு. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் "மக்கள் சக்தி இயக்கம்" என்பதை வலியுறுத்தும் விதமாக, "அமைதிப் புரட்சி இயக்கம்" என்று வைத்திருப்பார் பாலசந்தர். ஊரின் பெயர் நல்லூர். இப்படி காட்சிக்குக் காட்சி, உதயமூர்த்தியை செதுக்கி இருப்பார் பாலசந்தர்.

இன்று நிஜ உதயமூர்த்தியை மக்கள் மறந்து விட்டாலும், "உன்னால் முடியும்" தம்பி உதயமூர்த்தி காலத்தை கடந்தும் நிற்கிறார். படைப்பாளி மறையலாம், படைப்புகள் மறைவதில்லை என்பது இதுதானோ.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

தெலுங்கில் F2, F3, பகவந்த் கேசரி, சங்கராந்திகி வஸ்துனம், மன சங்கரா வர பிரசாத் காரு உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கி பெயர் பெற்று முன்னனி இயக்குனராக வலம் வருபவர் அனில் ரவிபுடி.


பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்

பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்

1991ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் நாட்டுக்கொரு நல்லவன். கன்னட நடிகர் ரவிச்சந்திரன் தயாரித்து, நடித்திருந்தார். ஜூகி சால்வா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது


பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

1980களில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கருப்பு சுப்பையா. ஏற்கெனவே வெள்ளை சுப்பையா என்று ஒருவர் இருந்ததால் இவர் தனது பெயரை

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map