சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிளாஷ்பேக்: பத்மினி பாடல் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்ஜிஆர்

பிளாஷ்பேக்: பத்மினி பாடல் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்ஜிஆர்
Advertisement
எழுத்து அளவு


எம்.ஜி.ஆர் நடிப்பில் 1956ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் "மதுரை வீரன்". பானுமதி, பத்மினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்த இந்த படத்தை லோனா செட்டியார் தயாரித்திருந்தார்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் லேனா செட்டியார் நடிகை பத்மனிக்கு கொடுத்த வாக்கின் காரணமாக அவருக்காக எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் தனியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர, இந்த பாடல் படத்தை கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர் படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

நான் பணம் போட்டு படம் எடுத்திருக்கிறேன். இதில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று லேனா செட்டியார் சொல்ல, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்னை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தை பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன் பத்மினி பாடல் படத்திற்கு தடையாக இல்லை, பலமாகத்தான் இருக்கிறது என்பதை எம்ஜிஆரிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் எம்ஜிஆர் விடுவதாக இல்லை. நன்றாக இருக்கிறதோ, இல்லையோ என்னை கேட்காமல் பத்மினிக்கு பாடல் வைத்தது தவறு அதை ஏற்க மாட்டேன் என்றார். ஆனாலும் என்.எஸ்.கே பொறுமையாக எம்ஜிஆரிடம் பேசி தயாரிப்பாளர் வட்டிக்கு வாங்கி படம் எடுத்த விஷயத்தை சொல்லி படம் வராவிட்டால் அவர் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி விடுவார் என்பதை சொல்லி எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தார்.

அதன்பிறகு "மதுரை வீரன்" படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. என்றாலும் பத்மினியின் பாடல் படத்திற்கு தேவைப்படாத ஒன்று என்ற கருத்தில் இருந்து எம்ஜிஆர் மாறவில்லை.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

கருப்பு வியாபாரம், கசிந்த தகவல்…

கருப்பு வியாபாரம், கசிந்த தகவல்…

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நாளை மே 14ம் தேதி வெளியாக உள்ள படம் கருப்பு. இப்படத்தின் வியாபாரம் எவ்வளவுக்கு நடந்துள்ளது

மேலும் படிக்க

சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும், சட்டசபையில் எம்எல்ஏ.,வாக பதவியேற்றார் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி. தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள அவர் சனாதனத்தை எதிர்த்து

மேலும் படிக்க

அறம் தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த அங்கீகாரம் டிரைலர் வெளியீடு

அறம் தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த அங்கீகாரம் டிரைலர் வெளியீடு

ஒரு காலத்தில் பிரபுதேவா நண்பராக, அவரின் கணக்கு வழக்குகளை பார்ப்பவராக இருந்தவர் கே.ஜே.ஆர் என்ற அழைக்கப்பட்ட கோட்டப்பாடி ஆர் ராஜேஷ். அடுத்து நயன்தாராவுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map