சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட்

பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட்
Advertisement
எழுத்து அளவு


மற்ற துறைகளை விட எப்போதுமே சினிமாவில் சென்டிமென்ட் அதிகமாக பார்க்கப்படும். ஆனால் அதையும் தாண்டி வெற்றி பெற்ற பெரிய நட்சத்திரங்கள் உண்டு.

இளையராஜா இசையமைத்த முதல் பாடல் பதிவின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிவாஜி நடித்த முதல் படம் வெளிவரவில்லை, ரஜினி நடித்த முதல் படத்தில் அவருடைய பல காட்சிகள் நீக்கப்பட்டன. எஸ் எஸ் ராஜேந்திரன் நடித்த முதல் படத்தின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது. இதையெல்லாம் தாண்டித்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இது போன்ற ஒரு அனுபவம் கே பாலச்சந்தருக்கும் உண்டு அதுவும் அவரது முதல் படத்திலேயே.

கே பாலச்சந்தர் அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எழுதிய நாடகம் "நீர்க்குமிழி". நாடகத்தை படித்த தயாரிப்பாளர் ஏ.கே வேலன், "இதை நாடகமாக நடத்த வேண்டாம் நேரடியாக சினிமாவாக தயாரிக்கலாம் அதையும் நீங்களே டைரக்ஷன் செய்யுங்கள்" என்று கூறினார்.

நான் திரைக்கதை வசனம் மட்டும் எழுதுகிறேன் எனக்கு டைரக்ஷன் தெரியாது என்று மறுத்தார் கே பாலச்சந்தர் என்றாலும் வற்புறுத்தி இயக்க வைத்தார் ஏ கே வேலன்.

வி.குமார் இசையில் உவமை கவிஞர் சுரதா எழுதிய "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" பாடலைத்தான் முதல் நாளில் பதிவு செய்ய முடிவு செய்தார்கள். நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் வந்து நிற்க, முன்பணம் கொடுப்பதாகச் சொல்லியிருந்த பைனான்சியர் வரவில்லை. பாடல் பதிவு ரத்து செய்யப்பட்டது.

இதற்கு நெகட்டிவ் சென்டிமென்ட் தான் காரணம் என்றார்கள். "ஆடி அடங்கும் வாழ்க்கையடா" என்று தொடங்கும் பாடலும் "நீர்க்குமிழி" என்ற நெகட்டிவ் தலைப்பும் காரணம் என்று சென்டிமென்ட் பயம் காட்டினார்கள். ஆனால் இதனைக் கே.பாலச்சந்தர் ஏற்கவில்லை, படம் பெரிய வெற்றி பெற்றது.

நாகேஷ் ஹீரோவாக நடித்தார். தனது உடல் மொழியாலும் ஜாலி எக்ஸ்பிரஷன்களாலும் படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்லும் அவர், எமோஷனல் காட்சிகளிலும் மிரட்டியிருப்பார். சவுகார் ஜானகி, வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, ஐ.எஸ்.ஆர், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்தார்கள். நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்

இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம்

மேலும் படிக்க

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம்.

மேலும் படிக்க

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

பெத்தி படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு வந்தார். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து தற்போது புஜ்ஜி

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map