சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்”

பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்”
Advertisement
எழுத்து அளவு
தேசியவாத சிந்தனையைத் தனது திரைமொழி மூலம் கற்பித்த திறன்மிகு இயக்குநராகப் பார்க்கப்பட்ட ஒரு ஒப்பற்ற திரைக்கலைஞர்தான் இயக்குநர் கே சுப்ரமணியம். இயக்குநர் ராஜா சாண்டோவிடம் சில ஊமைப் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, பின் “பவளக்கொடி” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ஒரு இயக்குநராக அறியப்பட்டிருந்த இவர், இயக்குநர் ராஜா சாண்டோவைப் போலவே தானும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் கொள்ள, அதன் விளைவாக வந்த திரைப்படம்தான் “அனந்தசயனம்” என்ற திரைப்படம்.தனது “மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், 1942ம் ஆண்டு தயாரித்து, அவரே இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தவரும் அவரே. ஒரு அறிமுக நடிகராக தன்னை அடையாளப் படுத்திய இத்திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளிவந்த பின் "நமக்கு இது சரிவராது" என இயக்குநர் கே சுப்ரமணியத்தையே ஒத்துக் கொள்ளவும் செய்திருந்தது இத்திரைப்படம். “கிருஷ்ணன் தூது”, “மன்மத விஜயம்”, “கச்சதேவயானி” போன்ற திரைப்படங்களில் அதுவரை நடனம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த நடிகை வி என் ஜானகிக்கு நடிக்கும் ஓர் அரிய வாய்ப்பை வழங்கிய திரைப்படமாக அமைந்திருந்தது இந்த “அனந்தசயனம்”.இயக்குநர் கே சுப்ரமணியம், எஸ் டி சுப்புலக்ஷ்மி, எம் வி ராஜம்மா, ஜி பட்டு அய்யர், வி என் ஜானகி ஆகியோர் நடித்து, 1942ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், வசூல் ரீதியாக ஒரு தோல்விப் படமாகத்தான் அமைந்திருந்தது. இந்தியத் திரைப்பட உலகின் முன்னோடியான இயக்குநர் கே சுப்ரமணியத்தின் ஆச்சர்யமிகு திரைத் தோற்றத்திற்காக மட்டுமே இன்றுவரை நினைவு கூறப்பட்டு வரும் ஒரு திரைப்படமாகத்தான் இந்த “அனந்தசயனம்” திரைப்படம் இருந்து வருகின்றது என்பதுதான் உண்மை.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு

தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருப்பது போன்று


பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ராம்சரண் நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் படம் பெத்தி. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின்


அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா?

பைசன் படத்துக்குபின் தனுஷை வைத்து படம் இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இதுவரை அவர் இயக்காத ஜானரில் அந்த படம் உருவாக போகிறது. அதற்கான பட்ஜெட்டும் மிக அதிகம் என கேள்வி. இப்படிப்பட்ட

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map