100வது நாளில் தி கோட்

100வது நாளில் தி கோட்
Advertisement
எழுத்து அளவு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா மற்றும் பல நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் "தி கோட்".

இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சுமார் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்றுடன் இப்படம் 100வது நாளைத் தொட்டுள்ளது. 100 நாள் படங்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் அபூர்வமாகிவிட்ட நிலையில் 100 நாளைத் தொடுவது சாதாரண விஷயமல்ல. சென்னை மதுரவாயலில் உள்ள எஜிஎஸ் தியேட்டரில் இந்தப் படம் 100 நாளைத் தொட்டுள்ளது.

இந்த வருடத்தில் 100வது நாளைத் தொட்டுள்ள இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த "சாமானியன்" படம் 100 நாள் ஓடியுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map