ஹாட்ஸ்பாட் 2ம் பாகம் அறிவிப்பு

ஹாட்ஸ்பாட் 2ம் பாகம் அறிவிப்பு
Advertisement
எழுத்து அளவு

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருந்த "ஹாட் ஸ்பாட்" மார்ச் 29ம் தேதி வெளியானது. இந்த படத்தின் டீசரும், விளம்பரமும் இதை அடல்ட் கண்டன்ட் படமாக காட்டியதால் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இந்த படம் 4 கதைகளை கொண்ட வித்தியாசமான படம் என்ற விபரங்கள் வெளியாகின.

இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவை படக் குழுவினர் நடத்தினார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது: திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் வார இறுதியில் தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருந்தால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. தயாரிப்பாளரிடம் சொன்ன 8 கதைகளில் நான்கு கதையை இந்த படத்தில் கொடுத்தோம். அடுத்த நான்கு கதைகளோடு அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 உருவாகும் என்றார்.

இயக்குனருக்கு 10 லட்சம் ரூபாய் மேடையிலேயே முன்பணமாக கொடுத்தார் தயாரிப்பாளர். முதல்பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினர் அப்படியே இரண்டாம் பாகத்தில் தொடருகின்றனர் என்றும் நடிகர், நடிகைகள் மாறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map