சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

எந்த சத்தமும் இல்லாத ஜனநாயகன்

எந்த சத்தமும் இல்லாத ஜனநாயகன்
Advertisement
எழுத்து அளவு

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த சத்தமும் இல்லை. ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் காரணமாக தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று கடைசியாக வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அதன்பின் தணிக்கை வாரியத்தின் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து கொடுக்கும் திருத்தங்களைச் செய்து படத்தின் தணிக்கையை முடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. வழக்கு வாபஸ் பெற்று இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ரிவைசிங் கமிட்டியின் நடைமுறை இருபது நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றார்கள்.

ஆனால், "ஜனநாயகன்" படத்தின் தணிக்கை நிலை என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அவர்களது மற்றொரு தயாரிப்பான "டாக்சிக்" படத்தின் உலகளாவிய வினியோகத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். மார்ச் 19ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

"ஜனநாயகன்" படம் குறித்து விஜய் தரப்பிலிருந்தும், அவரது கட்சி தரப்பிலிருந்தும் கூட தணிக்கை விவகாரம் குறித்து எந்த ஒரு விமர்சனமும் வைக்கப்படவில்லை. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளதாலும், விஜய் மீண்டும் சுற்றுப் பயணத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதாலும் அவர்களும் பட வெளியீட்டைப் பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்றே தெரிகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,

மேலும் படிக்க

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map