அதிகம் சம்பளத்திற்காக ‛லீடர் படமா... : துரை செந்தில்குமார் பேட்டி
எழுத்து
அளவு
‛எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ், கருடன்" போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛லீடர்". ‛லெஜண்ட்" சரவணன் ஹீரோவாக நடிக்க, அவருடன் பாயல் ராஜ்புட், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, சரவணன் தயாரித்துள்ளார். இப்படம் நாளை(ஏப்., 3) ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக துரை செந்தில்குமார் அளித்த பேட்டி, ‛‛சினிமா, பிசினஸ் இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்ப்பவர் சரவணன். படத்திற்குள் வந்துவிட்டால் அதை முடித்துவிட்டு தான் அடுத்த பணிக்கு செல்வார். லீடருக்காக 10 கிலோ வரை எடை குறைத்தார். நடனம் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தை வலுக்கட்டாயமாக திணிக்காமல் படத்துடன் வருவது போன்றே எடுத்துள்ளோம்.
படத்தில் மூன்று சண்டைக்காட்சிகள் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும். ஜார்ஜியா, தூத்துக்குடி, சென்னை போன்ற இடங்களில் இந்த கதை பயணிக்கும். இந்த படத்தில் அதிகம் சம்பளம் தந்தார்கள், அதற்காகவும் படம் பண்ணினேன். அதேசமயம் நான் எடுக்க நினைத்த சினிமாவையும் இப்படத்தில் எடுத்துள்ளேன். எது வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க, நான் தலையிட மாட்டேன் என சொல்லி தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார் சரவணன். சில இன்புட்ஸ் மட்டும் கொடுத்தார். என் சினிமா பயணத்தில் பட்ஜெட் பிரச்னையால் சில விஷயங்கள் நடக்காமல் போய் உள்ளது. அது இந்த படத்தில் எடுக்க முடிந்தது"" என்றார்.

கோலிவுட் செய்திகள்
தயாரிப்பாளர் கே.ராஜன், பிரம்மச்சாரிகள் (1983) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைவாழ்க்கையைத் துவங்கினார். 1991இல், நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடித்த
ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவக்குமார் முருகேசன். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். முதல் படத்தையே சூப்பர் ஹிட் ஆக்கிய

கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.