எல்ஐகே : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு

எல்ஐகே : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். "லவ் டுடே, டிராகன், டியூட்" என ஹாட்ரிக் 100 கோடிபடங்களைக் கொடுத்துள்ளார். இந்த வருடம் அவரது நடிப்பில் "டிராகன், டியூட்" படங்கள் வந்ததையடுத்து "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (சுருக்கமாக எல்.ஐ.கே) டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் வெளியீடு ஏற்கெனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதீப் ரங்கநாதன் நடித்த மற்றொரு படமான "டியூட்" படத்தின் வெளியீட்டையும் அதே நாளில் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அவர்கள் படத்தைத் தள்ளி வைக்க மறுத்துவிட்டனர். எனவே, "எல்ஐகே" அவர்களாகவே முன்வந்து படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவை விற்கப்படாத நிலையில் படம் டிசம்பர் 18ல் வெளியாகுமே என்ற சந்தேகம் திரையுலகில் இருந்தது. இருந்ததாலும் படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன், அந்த உரிமைகளை பட வெளியீட்டிற்குப் பிறகு விற்றுக் கொள்ளலாம் என அதிரடி முடிவு எடுத்துவிட்டாராம். அதனால், எந்த சிக்கலும் இல்லாமல் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map