லாக் டவுன் டிரைலர் வெளியானது
ஏஆர் ஜீவா இயக்கத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛லாக் டவுன்". சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக் டவுனை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் டிரைலரை இன்று(நவ., 27) வெளியிட்டுள்ளனர். அதில் ஏதோ ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனுபமா அதை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்தச்சூழலில் லாக்டவுன் வேற போடப்படுகிறது. அனுபமாவிற்கு என்ன பிரச்னை என்பதன் பின்னணியில் நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என தெரிகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக டிரைலரில் குறிப்பிட்டுள்ளனர். வரும் டிச., 5ல் படம் ரிலீஸாகிறது.
கோலிவுட் செய்திகள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன்,சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர்
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் மண்டாடி. ஆர்.எஸ். எண்போடெயின்மென்ட் தயாரிக்கும்
மாற்றம் வரும், மாற்றம் வரும் என தேர்தலுக்கு முன்பாக சில பல சினிமா நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள் என விஜய்க்கு தங்களது ஆதரவை வெளிப்படையாகத்






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.