சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

புதிய சாதனை படைத்த புஷ்பா 2 டீசர்

புதிய சாதனை படைத்த புஷ்பா 2 டீசர்
Advertisement
எழுத்து அளவு
தெலுங்குத் திரையுலகம் கடந்த சில வருடங்களில் பான் இந்தியா படங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. பிரபாஸ், ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகர்களாக மாறியுள்ளார்கள்.அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் "புஷ்பா 2" படத்தின் டீசர் நேற்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. டீசர் வெளியான 12 மணி நேரங்களிலேயே 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் மூலம் தெலுங்கில் 24 மணிநேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற புதிய சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் 42 மில்லியன் சாதனைகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் "ராதேஷ்யாம்" சாதனையை "புஷ்பா 2" டீசர் முறியடித்துள்ளது. மேலும், இந்த டீசருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன.இந்த வருட தெலுங்கு வெளியீடுகளில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக "புஷ்பா 2" அமையலாம் என்ற எதிர்பார்ப்பு டீசர் வெளியீட்டிற்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..!

மார்ச் மாத மூன்றாவது வார தொடக்கமான இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ளலாம். காசர்கோடு எம்பஸிமலையாள இயக்குநர் ஆதிஷ் எம் நாயர்

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்”

1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியிலான அதிக வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது இயக்குநர் ப நீலகண்டன் என்பது அனைவரும்

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி மீடியம் பட்ஜெட்டில் வெற்றி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map