மனைவி ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து

மனைவி ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து
Advertisement
எழுத்து அளவு

நடிகை ராதிகா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான "கிழக்கே போகும் ரயில்" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ராதிகா தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிஸியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகத்தில் 43 ஆண்டுகள் இடைவிடாமல் ஒரு பெண் நடித்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல. ராதிகாவின் 43 வருட திரையுலகப் பயணத்திற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா,” எனப் பாராட்டியுள்ளார்.

ராதிகாவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map