சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

‛ஆன்டி கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன்

‛ஆன்டி கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன்
Advertisement
எழுத்து அளவு


90களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சிம்ரன். பல படங்களில் நாயகியாக நடித்தாலும், இவரது நடன அசைவுக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். சில படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் குழந்தைக்கு தாய் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குறித்தாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்" படத்தில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி" படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‛டூரிஸ்ட் பேமிலி" படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கி வரும் ‛தி லாஸ்ட் ஒன்" படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்ரன் பேசியதாவது: சமீபத்தில் சக நடிகையிடம் ஒருவரிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, "உங்களைப் போல ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது" என அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.

நான் 25 வயதிலேயே முக்கியமான "ஆன்டி" கதாபாத்திரத்தமாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்" படத்தில் நடித்துள்ளேன். ‛டப்பா" கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான "ஆன்டி" கதாபாத்திரத்தில் நடிக்கலாம்"" என காட்டமாக பேசினார் சிம்ரன். அவர் குறிப்பிட்ட அந்த நடிகை யாராக இருக்கும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம்

பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம்

ஸ்டூடியோவிற்குள் முடங்கிக் கிடந்த சினிமா அதை விட்டு வெளியேறியபோது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தேடிச் சென்றது. ஊட்டி, கொடைக்கானல், மைசூர் பிருந்தாவனம் என சுற்றியபோது இயக்குனர்

மேலும் படிக்க

உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு

உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்டுள்ளார். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக இருந்து வந்தார் ரவி. இந்நிலையில்

மேலும் படிக்க

விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி

விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தற்போது சமூக நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். நாகர்கோவிலில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் பல்வேறு நலத்திட்ட

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map