ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ?
எழுத்து
அளவு
தமிகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பறி கொடுத்தது. அது மட்டுமல்ல ஸ்டாலின் கூட அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.இந்நிலையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரப்போகும் நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால், ஸ்டாலினுக்கு யாருமே எந்தவிதமான ஆறுதல் பதிவுகளையும் எக்ஸ் தளத்தில் போடவில்லை.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்” எனப் பேசியுள்ளார்.இவர்களது இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.தேர்தலுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.ஸ்டாலினுடனான ரஜினிகாந்த்தின் சந்திப்பு அவருடைய விஜய் எதிர்ப்பு நிலையை தொடர்வதாகவே காட்டுகிறது.
கோலிவுட் செய்திகள்
டில்லியை சேர்ந்த ரித்திகா நாயக் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. அசோக வனமுலு அர்ஜுனா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், நானி நடித்த ஹாய் நன்னா மூலம் மேலும் புகழ்
ராஜஸ்தான் சாலை விபத்தில் மரணம் அடைந்த தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி உடல், சென்னை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இன்று






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.