சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

வடம் - விமர்சனம்

தயாரிப்பு - விமல் | இயக்கம் - கேந்திரன்.வி

Published

on

வடம்

வடம்

2 மணி 16 நிமிடங்கள்
★★★★★
★★★★★
2.5
  • விமல்
  • சனஸ்கா ஸ்ரீ
  • மார் 06, 2026
  • கேந்திரன்.வி
  • வடம் - விமலும் மாடு பிடிக்கலை.. கதையும் பிடி மாடு..
தயாரிப்பு: மாசாணி பிக்சர்ஸ்.
இயக்கம்: கேந்திரன்.வி
நடிப்பு: விமல், நட்டி நட்ராஜ், ஆடுகளம் நரேன். சனஸ்கா ஸ்ரீ, பாலசரவணன், முனிஸ்காந்த்
ஒளிப்பதிவு: பிரசன்ன குமார்
இசை: இமான்
வெளியான தேதி: மார்ச் 6, 2026
நேரம்: 2 மணி 16 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5

வட மாவட்டங்களில் நடக்கும் வட மஞ்சு விரட்டு பின்னணியில் உருவாகும் கதை என்பதால் இந்த தலைப்பு. மாட்டை ஒரு கல்லில் கட்டி வைத்துவிட்டு, அதை குறிப்பிட்ட சுற்றளவில் ஓட வைத்து நடக்கும் மாடுபிடி விளையாட்டே வடம். நட்டியால் துரத்தி அடிக்கப்பட்ட, ஒரு கண் பார்வை இழந்த பாண்டிமுனி என்ற மாட்டை, சின்ன வயதில் இருந்தே தம்பி மாதிரி வளர்க்கிறார் விமல். பல போட்டிகளில் பாண்டிமுனி வெற்றி பெற, அந்த மாட்டை தனக்கு கேட்கிறார் நட்டி. விமல் மறுக்க இருவருக்கும் இடையே பகை வளர்கிறது. அதனால் எதற்காக ஜெயிலுக்கு போகிறார் விமல். அவரை கொல்ல நினைப்பவர்கள் யார்? என்ன காரணம் என்ற ரீதியில் மண் மணம் சார்ந்த கிராமத்து படமாக வடம் உருவாகி உள்ளது. கேந்திரன் வி இயக்கியுள்ளார்.

பாண்டிமுனி என்ற மாடு, வடமஞ்சுவிரட்டு, நட்டி, விமல் பகை இதுதான் படத்தின் முக்கியமான விஷயங்கள். கிராமத்து இளைஞன் கேரக்டரில் ஓரளவு பொருந்தி இருக்கிறார் விமல். குறிப்பாக சண்டை காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். மாட்டுக்கும் அவருக்குமான பாச பிணைப்பு செட் ஆகி இருக்கிறது. உணர்ச்சிகரமாக காட்சிகள், காதல் காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை,

வட மஞ்சு விரட்டு பற்றிய கதை, ஹீரோ களத்தில் இறங்கி மாடு பிடிக்கிறார். வீர தீரத்தை காண்பிக்கிறார் என எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றமே மிஞ்சும். அவர் தனது பாண்டிமுனி மாட்டை களத்தில் இறக்கி, பிடிங்க டா, அடக்கி பாருங்க டா என உசுப்பேத்து கிறார். அவர் மாட்டின் உரிமையாளர் மட்டுமே. விளையாட்டு வீரர் அல்ல.

ஹீரோயின் சனஸ்கா 1980, 90களின் ஹீரோயின் மாதிரி ஹோம்லியாக வந்து போகிறார். இடைவேளை டிவிஸ்ட்டில் மட்டும் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார். விமல் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் நடிப்பு உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. அம்மா, அக்கா, பாட்டி உட்பட சிலர் வருகிறார்கள்..அவர்களுக்கு சில டயலாக்குகள்..

வில்லனாக வரும் நட்டி நடிப்பு பரவாயில்லை ரகம்..அவருக்கு சில இடங்களில் வில்லத்தனம் பொருந்தி இருக்கிறது. சில இடங்களில் செட் ஆகலை. பல படங்களில் காமெடியனாக நடித்த முனிஸ்காந்த் இதில் குணசித்திரவேடத்தில் முத்திரை பதித்து இருக்கிறார். அவரின் பிளாஷ்பேக் காட்சி படத்துக்கு பிளஸ் இன்னொரு வில்லனாக வரும் மதுசூதனன் ராவ் வழக்கமான சினிமா வில்லன் மாதிரி பில்டப் கொடுத்துவிட்டு ஹீரோவிடம் அடி வாங்குகிறார்.

பாலசரவணன் காமெடி என்ற பெயரில் அவ்வப்பொழுது வந்து டயலாக் பேசிவிட்டு போகிறார். பாண்டி முனியாக வரும் அந்த மாட்டின் ஆக்ரோச நடிப்பு சிறப்பு. ஜல்லிகட்டு என்ற கோணத்தில் மாடு பிடிப்பதை பார்த்தவர்களுக்கு வட மஞ்சு விரட்டு விளையாட்டு, அதன் பின்னணி புதுசா இருக்கிறது. ஆனாலும் அந்த விளையாட்டை இன்னும் தெளிவாக காண்பித்து இருக்கலாம். செட் போட்டு போட்டி நடத்தி இருப்பது தெளிவாக புரிகிறது. ஒரிஜினல் போட்டி பார்க்கும் பீல் இல்லை.

இமான் பாடல்களில் பாண்டிமுனி, லவ் சாங் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசை, வடமாடு மஞ்சு விரட்டு காட்சிகளில் கலக்கி இருக்கிறார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவில் கிராமத்து டோன் தெரிகிறது. மாடு சம்பந்தப்பட்ட சீன் வி று விறுப்பு.

மாடு பாசம், பகை, சண்டை, கொலை, பழி வாங்கல் என கமர்சியலாக கதை இருந்தாலும்.அதை சொன்னவிதத்தில் ஈர்ப்பு இல்லை. விமல் நடிப்பில் ஆங்காங்கே செயற்கைதனம்.இதுதான் கிளைமாக்சில் நடக்க போகிறது. ஹீரோ மாடு முன்னமே ஜெயிக்க போகிறது என முன்னமே தெரிந்து விடுகிறது. அது பெரிய மைனஸ்.

வடம் என்ற தலைப்பு வைத்து விட்டு மாடு பிடி விஷயங்களை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம். அந்த சீன் களை எமோசனலாக, விமல் காதல் காட்சிகளில் ஈர்ப்பு இல்லை. முதற் பாதியை விட பிற்பாதி ஓகே ரகம். காதல் படமாகவும் இல்லாமல், கிராமத்து பழிவாங்கும் கதையாகவும் இல்லாமல், வட மஞ்சு விரட்டு படமாகவும் இல்லாமல், எதிலும் முழுமை பெறாமல் அரை குறையாக இருக்கிறது படம். நிறைய பில்டப் இருக்கிறது. ஆனால் அதற்கான விஷயங்கள், விறுவிறுப்பு படத்தில் இல்லை.

வடம் - விமலும் மாடு பிடிக்கலை.. கதையும் பிடி மாடு..

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் விமர்சனங்கள்

பேட்ரியாட் (மலையாளம்)

பேட்ரியாட் (மலையாளம்)

தயாரிப்பு : ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனிஇயக்கம் : மகேஷ் நாராயணன்நடிப்பு : மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பஹத்

கர

கர

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்இயக்கம் : விக்னேஷ்ராஜாநடிப்பு : தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார்,

பேட்டில்

பேட்டில்

தயாரிப்பு: எலைட் டாக்கீஸ்இயக்கம்: நாராயணன் பி.ஏநடிப்பு: அர்ஜூன் பிரபாகரன், ஆராத்யா, சுப்ரமணியம் சிவா, காயத்ரி,

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map